»   »  பண சிக்கலில் பருத்திவீரன்!

பண சிக்கலில் பருத்திவீரன்!

Subscribe to Oneindia Tamil

அமீர் இயக்கத்தில், பிரியாமணியின் புதுமை நடிப்பில், சூர்யாவின் தம்பி கார்த்தியின்கண்ணி நடிப்பில் உருவாகியுள்ள பருத்திவீரன் பணப் பிரச்சினை காரணமாகவெள்ளித் திரையைக் காண முடியாமல் விக்கித்து நிற்கிறதாம்.

வேகமாக ஆரம்பித்த இப்படத்தை படு நிதானமாக நகர்த்தி வந்தார் அமீர். படத்தில்பக்கா கிராமத்தான் கேரக்டர் கார்த்திக்கு. பிரியாமணிக்கு பாவாடை, தாவணிதான்காஸ்ட்யூம்.

இப்படத்திற்காக இதுவரை இல்லாத அளவுக்கு மெனக்கெட்டு இசையமைத்துள்ளார்யுவன் ஷங்கர் ராஜா. பின்னணி இசைக்கு மட்டும் 20 நாட்கள் எடுத்துக் கொண்டாராம்.பாடல்களில் கிராமிய மணத்தை பூசி மெழுகி கலக்கியுள்ளார்.

பருத்தி வீரன் பொங்கலுக்கே திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் வரவில்லை.விஜய், அஜீத் படங்களுடன் போட்டி போட வேண்டாம் என நினைத்துவெயிட்டிங்கில் வைத்துள்ளார்கள் என்றார்கள்.

ஆனால், பணப் பிரச்சினை காரணமாகத்தான் பருத்தியை கொள்முதல் செய்யமுடியாமல் கொடவுனிலேயே குவித்து வைத்துள்ளார்களாம்.

படத்துக்காக போடப்பட்ட பட்ஜெட்டைத் தாண்டி தொகை எகிறிப் போய் விட்டது.போட்டதை எடுக்க வசதியாக பெரிய விலையாக நிர்ணயித்துள்ளனர். இதனால்படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் தலையைச் சொறிகிறார்களாம்.

புது நடிகர் நடித்த படம், ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குமோ, அதனால் பெரியவிலை சொன்னால் கட்டுப்படியாகாது என்று பின் வாங்கியுள்ளார்களாம்.

மேலும், சிலர் தாங்கள் ஏற்கனவே கொடுத்திருந்த அட்வான்ஸ் பணத்தைத் திருப்பித்தந்துடுங்கோ என்று நச்சரிக்கவும் ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து தயாரிப்பாளர் கவுன்சிலில் பஞ்சாயத்தைக் கூட்டி விடிய விடிய அமீர்,விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் பேச்சுவார்த்தைநடத்தியுள்ளனர்.

விநியோகஸ்தர்கள் தங்களது நிலையில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால்உடன்பாடு ஏற்பட்டவில்லை.

இந் நிலையில் விஷயத்தை வேறு மார்க்கமாக தீர்க்க முடிவு செய்த அமீர், இப்போதுசூர்யாவை நாடியுள்ளார். நீங்கள் மனசு வைச்சு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்என்று அவர் கூறவே, சூர்யாவுக்கோ ரிஸ்க் எடுக்க பயமாக இருக்கிறதாம்.

சொந்தத் தம்பியே என்றாலும் கூட துட்டு வேற வேறதானே. மேலும், தனது பெயர்கெடக் கூடாது என்பதிலும் சூர்யா தெளிவாக இருக்கிறார்.

சிவக்குமாரும், ஜோதிகாவும் கூட இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டாம்,அமீரே பார்த்துக் கொள்ளட்டும் என்று சூர்யாவுக்கு அட்வைஸ் செய்துள்ளனராம்.இதனால் அமீர் தரப்பு மண்டை காய்ந்து கிடக்கிறது.

இப்படி பருத்தியை ஆளாளுக்கு பிய்த்து மேய்ந்து வருவதால் எப்ப சந்தைக்குப்போவது, சம்பாதிப்பது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளாராம் பருத்தி வீரன் கார்த்தி.

வெயில் காலம் வருவதற்குள் பருத்தியை வித்துடுங்கப்பா!

Please Wait while comments are loading...