»   »  பறிபோன பருத்தி-சோகத்தில் அமீர்!

பறிபோன பருத்தி-சோகத்தில் அமீர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் அமீர் தயாரிப்பில் உருவான பருத்தி வீரன் படம் நடிகர் சூர்யா கைக்குப் போய் விட்டதாம். இந்தகைமாறலில் ஒரு பெரிய இடத்து தலையீடும் இருந்ததால் அமீருக்கு ரூ. 2 கோடி வரை நஷ்டம்ஏற்பட்டுள்ளதாம்.

சூர்யாவை வைத்து மெளனம் பேசியதே, ஜீவாவை வைத்து ராம் என இரு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்அமீர். இயக்குநர் பாலாவின் முதன்மை சிஷ்யர்களில் ஒருவர்.

நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து பருத்தி வீரன் படத்தை இயக்கி, தயாரித்தார் அமீர். இப்படத்தில்கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்திருந்தார்.

படமும், பாடல்களும், இசையும் சிறப்பாக வந்திருப்பதாக படம் முடிவதற்குள்ளாகவே கோலிவிட்டில் டாக்கிளம்பி விட்டது. படம் முடிந்த பின்னரும் கூட வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பொங்கலுக்குப்படத்தைக் கொண்டு வர முடியவில்லை.

டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த 2005ம் ஆண்டுதான் தொடங்கினார் அமீர். அதன் முதல்தயாரிப்பு ராம். 2வது தயாரிப்புதான் பருத்தி வீரன்.

கார்த்தியை அவர் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதே சிவக்குமாரின் வீட்டில் வைத்துத்தான். மிகப்பெருமையாக அப்போது கார்த்தி குறித்தும், சிவக்குமார், சூர்யா குறித்தும் பேசினார் அமீர். மேலும், பருத்திவீரன் பட டிவி விளம்பரத்திலும் கூட சூர்யாவை விட்டே கார்த்தியை அறிமுகப்படுத்த வைத்தார்.

மதுரை, தேனி பக்கம் முகாமிட்டு பருத்தி வீரனை முடித்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு அச்சு அசலாக ஒருகிராமத்துப் படமாக பருத்தி வீரன் உருவாகியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் படு அற்புதமாக வந்திருப்பதாகவும்,அமீரின் இயக்கம் படு சிறப்பாக இருப்பதாகவும் கோலிவிட்டில் பேச்சு கிளம்பியது.

படத்தை மிகத் தரமாக உருவாக்க நினைத்து பணத்தை பற்றி கவலைப்படாமல் தண்ணீராக இறைத்துள்ளாராம்அமீர்.

அதேபோல சிவக்குமார் குடும்பமும் இந்தப் படத்துக்காக பலவிதமாக அமீருக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.இப்படத்தின் ஆடியோ கேசட் விழாவில் சிவக்குமாரைத் தவிர (வெளியூர் போயிருந்ததால்) அவரதுகுடும்பத்தினர் அத்தனை பேரும் (ஜோதிகா உள்பட) கலந்து கொண்டு அமீரை சிறப்பித்தனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அத்தனையும் தேனின் இனிமையுடன் வந்துள்ளது. ஏற்கனவேபாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி விட்டன.

படம் சிறப்பாக முடிந்ததைத் தொடர்ந்து தியேட்டர்களைக் கூட புக் செய்து விட்டார். ஆனால்விநியோகஸ்தர்களின் திடீர் பேக்-டிராக் காரணமாக படம் வெளிவருவது சுணங்கியது.

படத்துக்கு ரூ. 5 கோடி விலை நிர்ணயித்தார் அமீர். ஆனால் புதுமுக ஹீரோ படத்துக்கு இவ்வளவு பெரியரேட்டா என்று வினியோகஸ்தர்கள் ஜகா வாங்கியதால் தான் சிக்கல் எழுந்தது.

இதையடுத்து படத்தை ரிலீஸ் செய்ய உதவுமாறு முதலில் சூர்யாவைத்தான் அணுகினார் அமீர். ஆனால் முதலில்சூர்யா இந்த விவகாரத்தில் தலையிட ஆர்வம் காட்டவில்லையாம். இதனால் படத்தை ஜனவரி 26ம் தேதிக்குத்தள்ளி வைத்தார். மறுபடியும், சூர்யாவை அவர் அணுகியபோதும், ஸாரி சொல்லி விட்டாராம்.

இந் நிலையில்தான் திடீரென ஒரு நாள் காலை அமீருக்கு சிவக்குமாரிடமிருந்து போன் வந்தது. படத்தின்பிரிவியூ காட்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள் என அவர்கள் கூறவே, போர் பிரேம் தியேட்டரில் பிரிவியூவுக்குஏற்பாடு செய்தார் அமீர்.

பிரிவியூ படத்தைப் பார்த்த பின்னர் திருப்தியான முகத்துடன் காணப்பட்டனராம் சிவக்குமார் குடும்பத்தினர்.அடுத்து அவர்கள் சொன்னதுதான் அமீரை அப்செட் ஆக்கி விட்டது.

இந்தப் படத்தை உங்களால் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்பதால், அதை நாங்களே சொந்தமாக ரிலீஸ்செய்து கொள்கிறோம் என்று அவர்கள் கூறவே, அதிர்ச்சியை விழுங்கிக் கொண்டு சரி என்று கூறியுள்ளார் அமீர்.ஆனால் அவர்கள் கொடுப்பதாக சொன்ன ரேட் அமீருக்கு பெரும் அதிருப்தியைக் கொடுத்ததாம்.

சிவக்குமாரின் உறவினரும், சில்லுன்னு ஒரு காதல் படத் தயாரிப்பாளருமான கே.சி.ஞானவேல்ராஜா மூலமாகபடத்தை ரிலீஸ் செய்வது சூர்யாவின் திட்டம். பருத்தி வீரனை ரூ. 3 கோடிக்கு ஞானவேலிடம் விற்று விடுங்கள்என்று சூர்யா கூற அதை ஏற்கவில்லையாம் அமீர்.

ஆனால், வினியோகஸ்தர்களிடம் சொன்ன மாதிரியே ரூ. 5 கோடி வரை விலை சொனானாராம் அமீர்.

சூர்யா கேட்டு அமீர் மறுத்த சில நாட்களில் அந்தப் பெரிய புள்ளியிடமிருந்து போன் வந்ததாம். அலறி அடித்துஓடிய அமீரிடம் ரூ. 3 கோடிக்கு ரேட் பேசி படத்தை ஞானவேல் பெயருக்கு மாற்றி விட்டார்களாம்.

பெரிய இடத்து பொல்லாப்பை சம்பாதிக்க விரும்பாததால் தான் அமீர் அடங்கிப் போய்விட்டார் என்கிறார்கள்.

பார்த்துப் பார்த்து எடுத்த பருத்தி வீரன் இப்படி பறிபோனதை நினைத்து ரத்தக் கண்ணீர் வடிக்காத குறையாகஅப்செட் ஆகிக் கிடக்கிறாராம் அமீர்.

இப்படியாக கை மாறிய பருத்தி வீரன், ஒரு வழியாக வருகிற 26ம் தேதி தியேட்டர்களுக்கு வரப் போகிறது -கே.சி. ஞானவேல் ராஜாவின் தயாரிப்பாக!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil