»   »  23ம் தேதி பருத்தி வீரன் ரிலீஸ்!

23ம் தேதி பருத்தி வீரன் ரிலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்து அறிமுகமாகும் பருத்தி வீரன் ஒரு வழியாக வருகிற 23ம் தேதி திரைக்கு வருகிறது.

இயக்குநர் அமீரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பருத்தி வீரன். படம் முடிந்தும் விற்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்அமீர். பல வித இழுபறிக்குப் பின்னர் சூர்யாவின் உறவினரான ஞானவேல் ராஜா இப்படத்தைவாங்கியுள்ளார்.

படத்தை 26ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது அதை 3 நாட்கள் முன்கூட்டியே 23ம் தேதி ரிலீஸ்செய்யப் போகிறார்கள்.

சிவக்குமார் குடும்பத்திலிருந்து நடிக்க வந்திருக்கும் 3வது ஹீரோ கார்த்தி. இப்படத்தில் அச்சு அசல் பட்டுக்காட்டுகாட்டான் வேடத்தில் கலக்கலாக நடித்துள்ளாராம்.

கார்த்திக்கு ஜோடியாக பிரியா மணி நடித்துள்ளார். படம் பூராவும் மேக்கப் இல்லாமல் வருகிறார் பிரியா. அத்தோடுபாவாடை, தாவணிதான் முழு காஸ்ட்யூமும். இந்தப் படம் கார்த்திக்கும், பிரியா மணிக்கும் பெரும் பெயர் வாங்கித்தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

கிராமியப் படம் ஒன்றுக்கு யுவன் சங்கர் ராஜா இப்போதுதான் முதல் முறையாக இசையமைத்துள்ளார். பாட்டுக்கள்ஏற்கனவே ஹிட் ஆகி விட்டன. படம் ஹிட் ஆகக் காத்திருக்கிறது.

வெளி வரப் போகிறது என்று 3 முறை சொல்லி படம் வரவில்லை. இப்போது 4வது முறையாக சொல்லியுள்ளனர்.இப்போதாவது வெற்றிகரமாக வரட்டும்.அப்படியே வெல்லட்டும்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil