»   »  பருத்தி வீரனுக்கு குறவர்கள் எதிர்ப்பு!

பருத்தி வீரனுக்கு குறவர்கள் எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரன் படத்தில் குறவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதற்கு தமிழ்நாடு குறவர்கள் பழங்குடி மக்கள் சங்கம்கண்டனம் தெரிவித்துள்ளது. இப்படத்தை எதிர்த்து கோவை, தர்மபுரியில் கண்டனப் பேரணிநடத்தப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து குறவர் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் கேப்டன்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், பருத்திவீரன் படத்தில் ஒருகுறிப்பிட்ட சாதியின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் நோக்கத்துக்காக குறவர் இனத்தை மிகக்கேவலமாக இழிவுபடுத்தி காட்சிகள் வைத்துள்ளனர்.

இந்த செயல் தமிழகம் முழுவதும் குறவர் இன மக்களை பெருத்த மன வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இப்படத்தை தணிக்கைக்குழ எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை. இது குறவர் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதியாகும்.

உடனடியாக பருத்தி வீரன் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரையும், தணிக்கைக் குழுவையும்கேட்டுக் கொள்கிறோம்.

எங்களது கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 5ம் தேதி கோவையிலும், 9ம் தேதி தர்மபுரியிலும் கண்டனப் பேரணி,பொதுக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் துரை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil