»   »  பப்ளி புயல் பாயல்!

பப்ளி புயல் பாயல்!

Subscribe to Oneindia Tamil

புஸு புஸுன்னு பெங்களூர் தக்காளி கணக்கில் படு ஜோராக இருக்கிறார் பாயல்.

பெங்களூரில் பிறந்த ஆங்கிலோ இந்திய அழகுப் பிசாசு பாயல், கிளாமர் பிளஸ்நடிப்பைக் காட்ட பாய்ந்தோடி வரும் படம் கண்ணா நீ எனக்குத்தாண்டா (அழகானதலைப்பு!). அட்டகாசமான காதல் கதையில் திரில்லரையும் கலந்து பிரமாதமாகஎடுத்து வருகிறார்களாம் இப்படத்தை.

படத்தின் கதையை பீடி நுனியில் முடித்து விடலாம். அதாவது மொத்தம் 2 பெண்கள்.ஒத்த நாயகன். அந்த இரண்டு பெண்களும் என்னைத்தான் காதலிக்க வேண்டும். வேறுயாரையாவது லுக் விட்டே மவனே என்ற ரீதியில் ஹீரோவை தீவிரமாககாதலிக்கிறார்கள்.

இது போதாது என்று வயிற்றில் கருவைச் சுமந்த இன்னொரு பெண்ணோ, கருவுக்குகர்த்தா நீதான், கல்யாணம் செய்து கொள் என்று கெஞ்சுகிறாள். இப்படி மூன்றுபெண்களின் முக்கோண வலையில் சிக்கி திணறுகிறானாம் ஹீரோ.

இந்தக் காதல் வலையில் ஒரு திரில்லரையும் கோர்த்து படு அட்டகாசமாக படத்தைஇயக்கி வருகிறார் இயக்குநர் இளமாறன் (இவருக்கு சிவகங்கை மாவட்டம்இளையாங்குடி பக்கம் சோத்துக்குடி கிராமமாம்!).

படத்தோட ஹீரோ ராகேஷ். கணபதி வந்தாச்சு, காதலும் கற்று மற என இருபடங்களில் ஹீரோவாக நடித்துள்ளாராம். இருந்தாலும் இன்னும் புதுமுகமாகவேஇருக்கிறார்.

ராகேஷுக்கு ஜோடி போட்டு மதிஷா, லக்ஷா, பாயல் ஆகியோர் கலக்கி எடுத்துவருகிறார்கள். மூன்று பேரும் கிளாமரில் சக்கை போடு போடுகிறார்களாம்.ஒவ்வொருவரும் ஒரு டேஸ்ட்டில் ரசனையாக, ரகளையாக இருக்கிறார்கள்.

அதிலும் பாயலைப் பார்த்தாலே அய்யோ பத்திகிச்சு! படு பப்ளியாக இருக்கிறார்பாயல். பார்க்கும் பயலுகளையெல்லாம் பரட்டை கணக்கில் அலைய விடுவார்போல. அவ்வளவு கிக், பாயல் பார்வையில்.

பாயலுக்கு பெண்களை விட ஆம்பளைஸ்தான் நிறைய தோஸ்துகளாகஇருக்கிறார்களாம். ஏன் இப்படி என்று தெரியாத்தனமாக கேட்டு விட்டோம்.

எனக்கு நிறைய பாய் பிரண்டுகள் உள்ளனர். நம்ம அருண் விஜய் கூட (அதாங்கநடிகர் அருண்) எனக்கு நல்ல தோஸ்துதான். அது தவிர எனது சொந்தத்திலேயேபெரிய நட்பு வட்டாரம் உண்டு.

நான் மூடி டைப் கிடையாது. ஓப்பன் டைப். எல்லோரிட.ம் கலகப்பாக(கிளுகிளுப்பாக?) பேசுவேன். கலாட்டா செய்வேன். ஜாலியாக பேசிக்கொண்டிருப்பதுதான் எனக்குப் பிடிக்கும் (வாயைப் பார்த்தாலே தெரியுதே!) என்றுஅடுக்கிறார் தனது ஆண் வட்பு வட்டாரத்தை.

நல்ல தாட்டியாக இருக்கும் பாயல், பள்ளி வட்டாரத்தில் படு ராவடியாக இருப்பாராம்.அவருடன் இருக்கும் குமரிக் கும்பலைப் பார்த்தால் பசங்களுக்கு அண்டர்வேர்ஆட்டம் காணுமாம். புள்ளைங்க அம்புட்டு ரவுசு பண்ணுங்களாம்.

இவ்ளோ தில்லா இருக்கீங்கே, ஜில்லுனு காதல் கதை ஏதாவது கீதா என்று சைஸாககொக்கியை போட்டோம். நிச்சயம் கிடையாது. இதுவரை நான் பார்த்த பசங்களில்எனக்குப் பிடித்த, கனவு நாயகன் எவனும் சிக்கவில்லை.

அந்தக் கோணத்தில் யாரையும் பார்க்கவும் இல்லை. மம்மி, டாடி பார்க்கும்பையனைத்தான் கட்டிப்பேன். அவங்களுக்கு ஒரு சாய்ஸ் கொடுத்துப் பார்ப்போமேஎன்று முண்டா பனியனை லேசாக லூஸ் செய்தபடி கண் சிமிட்டி டாட்டா காட்டினார்பாயல்.

எந்தப் பய சிக்கப் போகிறானோ இந்த பாயல் புயல் கிட்டே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil