»   »  மூன்று முந்திரிகள்! பாயல், நந்திதா, லக்ஷா என முப்பெரும் சுந்தரிகளோடு, பாக்யராஜ் நடிக்க ஒரு சூப்பர்படம் கோலிவுட்டில் பூஜை போடப்பட்டுள்ளது.காசு இருக்கணும் (எதுக்கு, படம் எடுக்கவா?) என்று இப்படத்திற்கு பெயர்வைத்துள்ளார்கள். மனு நீதி என்ற ஓடாத படத்தைக் கொடுத்த ஜி.ஆர்.கோல்டுபிலிம்ஸ் நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்கப் போகிறது.டபுள் மீனிங் புகழ் பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹீரோவாக நடிப்பவர்விஷ்வா என்ற இளைஞர். இப்படத்தில் முதல் முறையாக பழிக்குப் பழி வாங்கும்கேரக்டரில், பயங்கர கெட்டப்பில் தோன்றுகிறாராம் பாக்யராஜ். (அய்யோ, அந்தஅம்மாஞ்சி குரல்ல இவர் பேசப் போறத நினைச்சாலே பயம்மா இருக்கே)பாக்யராஜை ஆக்ரோஷமாக பார்த்தால் ரசிகர்கள் பயந்து ஓடிப் போய் விடுவார்கள்என்ற பயத்தாலும், ஹீரோவை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற பீதியாலும்,ஒன்றுக்கு மூன்றாக ஹீரோயின்களைப் போட்டு படத்தை ஒரு வழியாகசமதளப்படுத்தியுள்ளார்கள்.ஈர நிலம் நந்திதா, பாயல், பபிதாவின் குலுக்கல் புத்திரி லக்ஷா என மூன்றுலட்டுக்களை மொத்தமாக உருட்டி, பிசைந்து கொடுக்கிறார்கள்.மூன்று பேருக்கும் என்ன வேலை கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை புத்திசாலியானநீங்கள் இந்நேரம் ஊகித்திருப்பீர்கள். அதேதான், அதேதான்.. சார்.. லட்டு என்றுகிளாமர் லட்டுவை விற்பது தான் வேலை.போட்டி போட்டு கிளாமர் பண்ணனும் என்று சொல்லித்தான் மூன்று பேரின் கையிலும்அட்வான்ஸ் காசைத் திணித்துள்ளார்களாம்.இதனால் மூவரும் கச்சை கட்டி போர்க் களத்துக்குத் தயாராகி நிற்கிறார்கள்.இதுபோதாதுன்னு, ஒரு கும் கட்டையை மும்பையிலிருந்து தூக்கி வந்து குத்தாட்டம்போடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.பணத்துக்காக இந்த மூன்று ஹீரோயின்களும் படும்பாட்டை சொல்லப் போகிறார்களாம்.படத்தின் ஒவ்வொரு சீனையும் ரசிகர்கள் அனு அனுவாக ரசித்துப் பார்க்கும் வகையில்படம் தூளாக இருக்குமாம். ரசிகர்கள் சீட்டை விட்டு எழுந்திருக்கவே முடியாதஅளவுக்கு படத்தின் கதை அம்சமாக அமைக்கப்பட்டிருக்கிறதாம்.பார்த்து கதையில ரொம்ப வெயிட்ட போட்டுறாதீங்க.. அப்புறம் ரசிகர்கள்சீட்டுலேயே தூங்கிருவாங்க.. எந்திருக்கவே மாட்டங்க, டார்ச் பாய் வந்து விரட்டும்வரை.

மூன்று முந்திரிகள்! பாயல், நந்திதா, லக்ஷா என முப்பெரும் சுந்தரிகளோடு, பாக்யராஜ் நடிக்க ஒரு சூப்பர்படம் கோலிவுட்டில் பூஜை போடப்பட்டுள்ளது.காசு இருக்கணும் (எதுக்கு, படம் எடுக்கவா?) என்று இப்படத்திற்கு பெயர்வைத்துள்ளார்கள். மனு நீதி என்ற ஓடாத படத்தைக் கொடுத்த ஜி.ஆர்.கோல்டுபிலிம்ஸ் நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்கப் போகிறது.டபுள் மீனிங் புகழ் பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹீரோவாக நடிப்பவர்விஷ்வா என்ற இளைஞர். இப்படத்தில் முதல் முறையாக பழிக்குப் பழி வாங்கும்கேரக்டரில், பயங்கர கெட்டப்பில் தோன்றுகிறாராம் பாக்யராஜ். (அய்யோ, அந்தஅம்மாஞ்சி குரல்ல இவர் பேசப் போறத நினைச்சாலே பயம்மா இருக்கே)பாக்யராஜை ஆக்ரோஷமாக பார்த்தால் ரசிகர்கள் பயந்து ஓடிப் போய் விடுவார்கள்என்ற பயத்தாலும், ஹீரோவை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற பீதியாலும்,ஒன்றுக்கு மூன்றாக ஹீரோயின்களைப் போட்டு படத்தை ஒரு வழியாகசமதளப்படுத்தியுள்ளார்கள்.ஈர நிலம் நந்திதா, பாயல், பபிதாவின் குலுக்கல் புத்திரி லக்ஷா என மூன்றுலட்டுக்களை மொத்தமாக உருட்டி, பிசைந்து கொடுக்கிறார்கள்.மூன்று பேருக்கும் என்ன வேலை கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை புத்திசாலியானநீங்கள் இந்நேரம் ஊகித்திருப்பீர்கள். அதேதான், அதேதான்.. சார்.. லட்டு என்றுகிளாமர் லட்டுவை விற்பது தான் வேலை.போட்டி போட்டு கிளாமர் பண்ணனும் என்று சொல்லித்தான் மூன்று பேரின் கையிலும்அட்வான்ஸ் காசைத் திணித்துள்ளார்களாம்.இதனால் மூவரும் கச்சை கட்டி போர்க் களத்துக்குத் தயாராகி நிற்கிறார்கள்.இதுபோதாதுன்னு, ஒரு கும் கட்டையை மும்பையிலிருந்து தூக்கி வந்து குத்தாட்டம்போடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.பணத்துக்காக இந்த மூன்று ஹீரோயின்களும் படும்பாட்டை சொல்லப் போகிறார்களாம்.படத்தின் ஒவ்வொரு சீனையும் ரசிகர்கள் அனு அனுவாக ரசித்துப் பார்க்கும் வகையில்படம் தூளாக இருக்குமாம். ரசிகர்கள் சீட்டை விட்டு எழுந்திருக்கவே முடியாதஅளவுக்கு படத்தின் கதை அம்சமாக அமைக்கப்பட்டிருக்கிறதாம்.பார்த்து கதையில ரொம்ப வெயிட்ட போட்டுறாதீங்க.. அப்புறம் ரசிகர்கள்சீட்டுலேயே தூங்கிருவாங்க.. எந்திருக்கவே மாட்டங்க, டார்ச் பாய் வந்து விரட்டும்வரை.

Subscribe to Oneindia Tamil

பாயல், நந்திதா, லக்ஷா என முப்பெரும் சுந்தரிகளோடு, பாக்யராஜ் நடிக்க ஒரு சூப்பர்படம் கோலிவுட்டில் பூஜை போடப்பட்டுள்ளது.

காசு இருக்கணும் (எதுக்கு, படம் எடுக்கவா?) என்று இப்படத்திற்கு பெயர்வைத்துள்ளார்கள். மனு நீதி என்ற ஓடாத படத்தைக் கொடுத்த ஜி.ஆர்.கோல்டுபிலிம்ஸ் நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்கப் போகிறது.

டபுள் மீனிங் புகழ் பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹீரோவாக நடிப்பவர்விஷ்வா என்ற இளைஞர். இப்படத்தில் முதல் முறையாக பழிக்குப் பழி வாங்கும்கேரக்டரில், பயங்கர கெட்டப்பில் தோன்றுகிறாராம் பாக்யராஜ். (அய்யோ, அந்தஅம்மாஞ்சி குரல்ல இவர் பேசப் போறத நினைச்சாலே பயம்மா இருக்கே)

பாக்யராஜை ஆக்ரோஷமாக பார்த்தால் ரசிகர்கள் பயந்து ஓடிப் போய் விடுவார்கள்என்ற பயத்தாலும், ஹீரோவை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற பீதியாலும்,ஒன்றுக்கு மூன்றாக ஹீரோயின்களைப் போட்டு படத்தை ஒரு வழியாகசமதளப்படுத்தியுள்ளார்கள்.


ஈர நிலம் நந்திதா, பாயல், பபிதாவின் குலுக்கல் புத்திரி லக்ஷா என மூன்றுலட்டுக்களை மொத்தமாக உருட்டி, பிசைந்து கொடுக்கிறார்கள்.

மூன்று பேருக்கும் என்ன வேலை கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை புத்திசாலியானநீங்கள் இந்நேரம் ஊகித்திருப்பீர்கள். அதேதான், அதேதான்.. சார்.. லட்டு என்றுகிளாமர் லட்டுவை விற்பது தான் வேலை.

போட்டி போட்டு கிளாமர் பண்ணனும் என்று சொல்லித்தான் மூன்று பேரின் கையிலும்அட்வான்ஸ் காசைத் திணித்துள்ளார்களாம்.

இதனால் மூவரும் கச்சை கட்டி போர்க் களத்துக்குத் தயாராகி நிற்கிறார்கள்.இதுபோதாதுன்னு, ஒரு கும் கட்டையை மும்பையிலிருந்து தூக்கி வந்து குத்தாட்டம்போடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.


பணத்துக்காக இந்த மூன்று ஹீரோயின்களும் படும்பாட்டை சொல்லப் போகிறார்களாம்.

படத்தின் ஒவ்வொரு சீனையும் ரசிகர்கள் அனு அனுவாக ரசித்துப் பார்க்கும் வகையில்படம் தூளாக இருக்குமாம். ரசிகர்கள் சீட்டை விட்டு எழுந்திருக்கவே முடியாதஅளவுக்கு படத்தின் கதை அம்சமாக அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

பார்த்து கதையில ரொம்ப வெயிட்ட போட்டுறாதீங்க.. அப்புறம் ரசிகர்கள்சீட்டுலேயே தூங்கிருவாங்க.. எந்திருக்கவே மாட்டங்க, டார்ச் பாய் வந்து விரட்டும்வரை.


Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil