»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பையில் இருந்து மீண்டும் வந்திருக்கிறார் இன்னொரு திமிசு கட்டை. பெயர் பாயல். ஏற்கனவேவயசுப் பசங்களில் நடித்தவர். சான்ஸ் இல்லாததால் ஊருக்குப் போனவர் திரும்பி வந்துவிட்டார்.

இளமை கும்மாளம் போடும் கட்டுடல். இந்தியில் சொக்க வைக்கும் பேச்சு, நடிக்க வராது. இதுபோதாதா கோடம்பாக்கத்தை வளைக்க.

வயசுப் பசங்களைத் தொடர்ந்து, கிளாப்ஸ் என்ற படத்தில் நடிக்க வந்துள்ளவரின் கையில்இப்போது பட்டைய கிளப்பு என்று இன்னொரு படம். இரண்டிலும் ஹீரோயினாக நடிக்கிறார்.

இது தவிர ஒத்த பாட்டுக்கும் ஆட ரெடி என்று தயாரிப்பாளர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். சம்பளம் எல்லாம் பெரிசில்லை, கொடுத்ததை வாங்கிக்க ரெடி என்கிறார்.இதனால் அந்த வகையில் சில படங்கள் புக் ஆனாலும் ஆச்சரியமில்லை.

கிளாப்ஸ் படத்தில் இவருக்கு சிவசுரேஷ் என்ற சின்னப் பையன் தான் ஜோடி. பாயலின்பாய்ச்சலுக்கு பயந்து, கொஞ்சம் வெட்கப்பட்டே நடிக்கும் இவருக்கு தைரியம் தருவதும் பாயல்தானாம்.

பட்டைய கிளப்பு படத்தை இயக்குவது வில்லன் நடிகர் பொன்னம்பலம். எத்தனையேஹீரோக்களை புரட்டி எடுத்து, பல ஹீரோக்கால் புரட்டி எடுக்கப்பட்ட பொன்னம்பலத்துக்கு முதலில்ஹீரோவாகும் ஆசை வந்தது. இதனால் அம்மையப்பா என்ற படத்தைத் தயாரித்து நடித்தார். படம்பூச்சா ஆகிவிட்டது.

ஆனாலும் மனம் தரளாமல் மீண்டும் சொந்த காசைப் போட்டு பட்டைய கிளப்பு படத்தை எடுக்கஆரம்பித்துள்ளார். இதை இயக்குவதும் அவரே.

இதில் ஹீரோ ஸ்ரீமன். வழக்கம் போல் காமெடி வில்லனாக பொன்னம்பலமே நடிக்கிறார்.

கவர்ச்சியையே மூலமாக வைத்து படம் தயாராவதால் பாயலோடு சேர்ந்து பாய்ச்சல் காட்ட தீபா,பிரியங்கா, சுஸ்மிதா சில புதுமுகங்களும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அவரவர் முடிந்த அளவுக்குதிறமை காட்டி வருகிறார்கள்.

இவர்கள் தவிர மும்பையைச் சேர்ந்த டான்ஸர் அருணா அரோராவின் அய்தலக்கா டான்சும்படத்தில் சேர்த்திருக்கிறார்கள். விரைவில் திரைக்கு வருகிறதாம் இந்தப் படம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil