twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித் மாதிரியே சிவகார்த்திகேயனையும் அழிக்க நினைத்தார்கள்...நடிகர் மீசை ராஜேந்திரன் சொன்ன தகவல்!

    |

    சென்னை: சிவகார்த்திகேயன் இப்பொழுது தமிழ் சினிமாவில் மிகவும் உயர்ந்த இடத்தில் உச்ச நடிகராக உள்ளார்

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தெலுங்கிலும் மாஸ் ஹிட் பெற்று வருவதால் இப்பொழுது நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் உருவாகிவரும் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்

    இந்நிலையில் பிரபல வில்லன் நடிகர் மீசை ராஜேந்திரன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அஜித் போலவே சிவகார்த்திகேயனையும் அழிக்க நினைத்தவர்கள் என பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்.

    புதுமுக இயக்குனர்களை டாப் நடிகர்கள் மதிக்க வேண்டும்... இயக்குனர் சிபி சக்கரவர்த்தி வேண்டுகோள்!புதுமுக இயக்குனர்களை டாப் நடிகர்கள் மதிக்க வேண்டும்... இயக்குனர் சிபி சக்கரவர்த்தி வேண்டுகோள்!

    காமெடியிலும் கலக்கும் சிவகார்த்திகேயன்

    காமெடியிலும் கலக்கும் சிவகார்த்திகேயன்

    நடிகர் சிவகார்த்திகேயன் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும் தன்னுடைய படங்களில் ஹீரோவாக மட்டுமல்லாமல் காமெடியிலும் கலக்கும் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் தெலுங்கு,மலையாள ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.

    150 கோடியைத் தாண்டி வசூல்

    150 கோடியைத் தாண்டி வசூல்

    சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் பல தெலுங்கு, மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்டு அங்கும் வசூல் சாதனைகளை செய்து வருகிறது. டாக்டர் கொடுத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் 150 கோடியைத் தாண்டி மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளது இந்த படம் தெலுங்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி கண்டுள்ளது.

    பிரின்ஸ்

    பிரின்ஸ்

    இதுவரை தமிழில் மட்டும் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கிலும் மிகப்பெரிய மார்கெட் உள்ளது எனவே தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடியாக உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பிரின்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரின்ஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிவகார்த்திகேயனையும் அழிக்க நினைத்தார்கள்

    சிவகார்த்திகேயனையும் அழிக்க நினைத்தார்கள்

    முன்னணி நடிகர்கள் பல ஆண்டுகளாக செய்ததை சிவகார்த்திகேயன் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலேயே சாதனைகளை செய்து முன்னணி நடிகராக மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் வந்ததால் பல நெருக்கடிகளுக்கு உள்ளானது பலரும் அறிந்ததே. இந்த நிலையில் தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் பிரபல வில்லன் நடிகர் மீசை ராஜேந்திரன் அஜித்தை போலவே சிவகார்த்திகேயனையும் அழிக்க நினைத்தார்கள், ஒரு கட்டத்தில் அஜித் நிறைய படங்கள் நடித்தார் பல படங்கள் தோல்வியை சந்தித்தது. அதில் இருந்து மீள முடியாமல் அஜித் தவித்தார்.

    Recommended Video

    Prince - Sivakarthikeyan-னின் முதல் Bilingual படம் | ஆர்வத்தில் ரசிகர்கள் *Kollywood
    அடுத்த கட்ட திட்டங்கள்

    அடுத்த கட்ட திட்டங்கள்

    இப்பொழுது அதேபோலவே சிவகார்த்திகேயனுக்கும் சில படங்கள் தோல்வி அடைந்த உடனேயே அவ்வளவுதான் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் முடிந்தது என பலரும் பேசினார்கள். ஆனால் நம்ம வீட்டு பிள்ளை மற்றும் அடுத்த கட்ட திட்டங்கள் என்று சிவகார்த்திகேயன் படத்தின் வெற்றிகள் அதை முற்றிலும் மாற்றியுள்ளது என பேசியுள்ளார்.

    English summary
    People tried to Supress Sivakarthikeyan like Ajith Kumar Says Actor Meesai Rajendran
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X