சிம்பு மாதிரி ஆள பாத்த உடனே புடிக்கும்.. என்ன பாக்க பாக்க தான் புடிக்கும்.. ஓப்பனா பேசிய தனுஷ்!
சென்னை: 80களில் குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் சிம்பு. 2001 ஆம் ஆண்டு சொன்னால் தான் காதலா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தனுஷ்.
சிம்புவை பற்றி நடிகர் தனுஷ் கூறிய விஷயங்கள் தற்போது அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

கடும் போட்டி நிலவியது
காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகராக நிலைநிறுத்தி கொண்டார் தனுஷ். அதேபோல் அப்போது அலை, கோவில், குத்து, மன்மதன், சரவணன், வல்லவன், என்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார் சிம்பு. அதன் பிறகு இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவ தொடங்கியது.

தொடர்ந்து தோல்வி
அதன் பிறகு தங்களது ஸ்டைலுக்கு ஏற்றவாறு படங்களில் நடித்து வர தங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டனர். அன்று முதல் இன்று வரை தங்களுக்கேற்ற கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து தற்போது இருவரும் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். சிம்புவிற்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு பல படங்கள் வரிசையாக தோல்வியடைந்தது, கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் இவருக்கு கம்பேக் படமாக அமைந்தது.

வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிம்பு
தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் மற்றும் 10 தல படத்தில் நடித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது வெந்து தணிந்தது காடு திரைப்படம். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், மாப்பிள்ளை, 3, வேலையில்லா பட்டதாரி, என்று தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வந்தார் தனுஷ். அதன் பிறகு வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா, பட்டாசு, கர்ணன், ஜகமே தந்திரம், போன்ற பல படங்கள் வருமான ரீதியாக தோல்வியடைந்து இருந்தாலும் பாலிவுட் வரைக்கும் நடித்துள்ளார் தனுஷ்.

பாக்க பாக்க தான் புடிக்கும்
தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்க, நானே வருவேன் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் வாத்தி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். ஹிட் படத்திற்காக அவர்களது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் சிம்புவை பற்றி தனுஷ் கூறிய விஷயங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. சிம்பு மாதிரியான பசங்களை பெண்களுக்கு பார்த்தவுடனே பிடிக்கும், ஆனால் என்னை போல் இருக்கும் பசங்களை பெண்களுக்கு பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இந்த டயலாக்கை படிக்காதவன் படத்தில் கூறியிருக்கிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கூறிய இந்த விஷயம் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











