»   »  பேயாய் அலையும் பேரரசு!

பேயாய் அலையும் பேரரசு!

Subscribe to Oneindia Tamil

பெரும் சத்தத்துடன் கோலிவுட்டில் கலக்கல் என்ட்ரி கொடுத்த பேரரசு, இப்போது நடிக்க ஆள் கிடைக்காமல், படம் எடுக்க தயாரிப்பாளர்கிடைக்காமல், கதையும் கிடைக்காமல் பேயாய் அலைந்து கொண்டிருக்கிறாராம்.

கமர்ஷியல் படங்கள் எடுப்பதில் நான் தான் ராசா, மற்றவங்கள்ளாம் கூஜா என்று படு தெனாவட்டாக பேசி வந்தவர் பேரரசு. இவரது முதல்படத்திலேயே சின்ன பிட்டு ரோலில் தலையைக் காட்டி பய-முறுத்தினார்.

திருப்பாச்சியின் வெற்றியைத் தொடர்ந்து தன்னைப் பற்றி பெரிய லெவலில் பில்டப் கொடுக்க ஆரம்பித்த பேரரசு, அஜீத்தை வைத்து எடுத்ததிருப்பதியில் அவரும் ஒரு கேரக்டரில் வந்து அஜீத்தை கடுப்படித்தார்.

தொடர்ந்து விஜயகாந்த்தை வைத்து தர்மபுரி என்ற ஒரு சூப்பர் படத்தை எடுத்து கேப்டனை ஒரேயடியாக கவிழ்த்தார். இந்த இரு படங்களும்போட்ட போட்டால் பேரரசு பக்கம் யாருமே இப்போது தலையை வைத்துப் படுப்பதே இல்லையாம்.

கமர்ஷியல் பட ராஜா என்று கூறி வந்த பேரரசு, இப்போது தனிக் காட்டு ராஜாவாகி விட்டாராம். அவருடன் ஒரு சில உதவியாளர்கள்தான்இருக்கிறார்களாம்.

படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் கிடைக்காமல் அவதிப்படுகிறாராம் பேரரசு. இந்த நேரம் பார்த்து நல்ல கதையும் தோன்றாமல் கடுப்பாகிஇருக்கிறாராம். இதனால் தனது உதவியாளர்களிடம் ஏதாவது நல்ல கதை இருந்தா சொல்லுங்கப்பு என்று அனத்தி வருகிறாராம்.

கதை, தயாரிப்பாளர், நடிக்க ஒரு ஹீரோ என பேயாய் அலைந்து வருகிறாராம் பேரரசு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil