பெரியார் பாடல் 23ம் தேதி ரிலீஸ்
பெரியார் படத்தின் பாடல் கேசட் மற்றும் சிடி வெளியீடு வருகிற 23ம் தேதிசென்னையில் நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி கேசட் மற்றும் சிடியைவெளியிடுகிறார்.
தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு பெரியார் என்ற பெயரில்திரைப்படமாகியுள்ளது. சத்யராஜ் பெரியார் வேடத்தில் நடிக்கிறார். குஷ்புமணியம்மையாகவும், ஜோதிர்மயி நாகம்மையாகவும் நடித்துள்ளனர்.இயக்குநர் ஸ்டான்லி அண்ணா வேடத்தில் நடித்துள்ளார். ஞானராஜசேகரன் படத்தைஇயக்கியுள்ளார். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களைபுனைந்துள்ளார்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் தயாராகி விட்டன. இதைத் தொடர்ந்து வருகிற 23ம்தேதி பாடல் கேசட் மற்றும் சிடிக்கள் வெளியிடப்படவுள்ளன. முதல்வர் கருணாநிதிகலந்து கொண்டு இவற்றை வெளியிடுகிறார்.
இப்படத்தில் பெரியாரின் தத்துவங்களை மனதில் வாங்கி அதன் அடிப்படையில்பாடல்களைப் புணைந்துள்ளார் வைரமுத்து. அதற்கு இசை மூலம் உயிர்கொடுத்துள்ளார் வித்யாசாகர்.
இசைஞானி இசையமைக்க மறுத்து விட்ட நிலையில், பெரியார் படத்தின்பாடல்களுக்கு வித்யாசாகர் எப்படி இசையமைத்துள்ளார் என்பதை கேட்டு அறியஇசைப் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவல் எழுந்துள்ளது.
23ம் தேதி வரை பொறுப்போமே!


Click it and Unblock the Notifications