»   »  6 மொழிகளில் பெரியார்!

6 மொழிகளில் பெரியார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பெரியார் திரைப்படம் தமிழ் தவிர மேலும் 6மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் படம் திரைக்கு வருகிறது.

சமூக சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடையே பரப்பிய பெருமைக்குரிய தந்தை பெரியாரின் வாழ்க்கைவரலாறு, திரைப்படமாகியுள்ளது.

சத்யராஜ் பெரியார் வேடத்தில் நடித்துள்ளார். அவரது மனைவி நாகம்மையாக ஜோதிர்மயி, 2வது மனைவிமணியம்மையாக குஷ்பு நடித்துள்ளனர். அண்ணா வேடத்தில் இயக்குநர் ஸ்டாண்லி நடித்துள்ளார்.ஞானராஜசேகரன் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ரஷியன் ஆகிய மொழிகளிலும் டப்செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றுத் தலைவர் ஒருவரின் வாழ்க்கையை சித்த>க்கும் படம் பல மொழிகளில்டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு காந்தி படம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு வெளியானது. இதைத் தொடர்ந்துஅம்பேத்கர் படம் உருவானது. இருப்பினும் இது பல மொழிகளில் டப் செய்யப்படவில்லை.

இதேபோல காமராஜர் படமும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியானது. இவற்றில் காந்தி படத்தைத் தவிரமற்ற படங்கள் சிறப்பாக இருந்ததாக பாராட்டு பெற்றனவே தவிர பெரிய அளவில் வசூலைக்கொடுக்கவில்லை.

இந் நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பெ>யார் படம் 6 மொழிகளில் டப் செய்யப்பட்டுவெளியாவது முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழகம் தவிர ரஷியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் பெ>யார் படத்தின் ஷூட்டிங் நடந்தது. இப்படத்துக்குதமிழக அரசு ரூ. 95 லட்சம் மானிய உதவியையும் அளித்தது நினைவிருக்கலாம்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெரியார் படம் இம்மாதம் ரிலீஸாகிறது.

சென்சார் போர்டில் படத்தின் ஒரு காட்சியைக் கூட கட் செய்யாமல் அப்படியே தணிக்கை சான்றிதழ்தந்தார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil