மே 1ல் பெரியார் ரிலீஸ்
பெரியார் திரைப்படம் மே 1ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
திராவிடர் கழகம் சார்பில், லிபர்ட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை பெரியார் என்ற பெயரில் படமாக்கியுள்ளது. ஞானராஜசேகரன் இயக்கியுள்ளார். சத்யராஜ் பெரியார் வேடத்தில் நடித்துள்ளார். குஷ்பு, ஜோதிர்மயி, ரகஸ்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.படம் தயாராகியும் இன்னும் வெளி வராமல் இருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதுகுறித்து கேட்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் லிபர்ட்டி கிரியேஷன்ஸ் நிறுவன இயக்குநர் சாமித்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரியார் திரைப்படம் மே 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொதுமக்களில் பலரும், பெரியார் பற்றாளர்களும் படம் எப்போது வரும் என்று ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டே இருப்பதால், அவர்களின் ஏகோபித்த ஆசையைப் பூர்த்தி செய்யும் வகையில், உலகத் தொழிலாளர்களின் கொண்டாட்ட நாளான மே 1ம் தேதி தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பெரியார் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார் சாமித்துரை.
இந்த முறையாவது சொன்ன தேதியில் பெரியார் வருவாரா?


Click it and Unblock the Notifications











