இந்தி பெரியார் ரெடி

By Staff

பெரியார் படத்தின் இந்திப் பதிப்பு ரெடியாகி விட்டதாம். விரைவில் வட இந்தியா முழுவதும் பெரியாரின் இந்தி டப்பிங் வெளியிடப்படவுளளது.

தமிழக அரசின் நிதியுதவியுடன், சத்யராஜ், குஷ்பு, ஜோதிர்மயி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான படம் பெரியார். தந்தை பெரியாரின் வாழ்க்கைக் கதையே பெரியார் படமாக வெளியானது.

தமிழக மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட பெரியார் ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் சப் டைட்டிலுடன் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது.

தற்போது இந்தியி்ல் பெரியார் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்காக மும்பையில் வைத்து இந்தி டப்பிங் நடந்து முடிந்துள்ளது. இதுதவிர தெலுங்கிலும் பெரியாரை டப் செய்கின்றனராம்.

இந்தி பெரியார் வட இந்தியாவில் பெரியார் குறித்த விழிப்புணர்வையும், அவரது சமூக போராட்டங்கள் குறித்த அறிவையும் விரிவுபடுத்த உதவும் என்று இயக்குநர் ஞான ராஜசேகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தி பெரியார் படம் உ.பி, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெளியிடப்படவுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X