twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெருசு கிளப்பும் பிரச்சனை சென்னையைக் கலங்கடித்துத் திரிந்து மெரீனா கடற்கரையில் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான, தாதாவீரமணியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் பெருசு என்ற திரைப்படம் போலீஸ்அதிகாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.மெரீனா கடற்கரை அருகே உள்ள அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்தவன் வீரமணி. கட்டப் பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல்-விற்பனை, ஆள் கடத்தல், கொலை, பணம் பறித்தல் என சகல விதமான சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டு வந்தான்.தனது மீனவர் சமூகத்தினரை கேடயமாக வைத்துக் கொண்டு இயங்கி வந்தான். இவனது அட்டகாசம் அதிகரிக்கவே,அப்போதைய கமிஷ்னர் விஜய்குமார் இவனுக்கு சமாதி கட்ட முடிவு செய்தார்.இவனது கதையை முடிக்கும் வேலையை இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரையிடம் வழங்கினார். வெள்ளைத்துறையும் பிச்சைக்காரர்வேடத்தில் கடற்கரையிலேயே பல மாதங்கள் அலைந்து திரிந்து வீரமணியின் செயல்பாடுகளை கண்காணித்தார்.ஒரு நாள் காலையில் வழக்கம்போல் தனது அடிதடி கூட்டாளிகளுடன் படகு மறைவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவீரமணியை வெள்ளைத்துறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பினார். கடற்கரையில் தயாராகக் காத்திருந்தபோலீசார் வெள்ளைத்துறையை பத்திரமாக பிக்-அப் செய்து கொண்டு தப்பினர்.வீரமணியின் மிக ஃபேவரிட் ஸ்பாட் ஆன மெரீனா கடற்கரையிலேயே வைத்து அவனை வீழ்த்தினார் வெள்ளத்துரை. இதேவெள்ளத்துரைதான் பின்னர் சந்தனக் கடத்தல் வீரப்பனின் முடிவுக்கும் முக்கியக் காரணமாக அமைந்தார்.இலங்கைத் தமிழர் என்ற போர்வையில் வீரப்பனுடன் கடைசி நேரத்தில் ஆம்புலன்சில் அமர்ந்து வந்தவர் வெள்ளைத்துறைதான். இவர் தான் வேனுக்குள் கிரனைட் குண்டை உருட்டிவிட்டு வீரப்பன் கும்பலை நிலை குலையச் செய்தார். இதன் பின்னரேவெளியில் இருந்து போலீசார் துப்பாக்கிளால் வீரப்பனை சல்லடையாக்கினர்.இந் நிலையில் செத்துப் போன ரெளடி வீரமணி தற்போது மீண்டும் செய்திகளில் அடிபடத் தொடங்கியுள்ளான். இந்த முறைசினிமா ரூபத்தில்.வீரமணியின் கதையை வைத்து பெருசு என்று ஒரு படம் உருவாகி வருகிறது. (வீரமணியை அவனது அடிப்பொடிகள் பெருசுஎன்று தான் கூப்பிடுவார்களாம்) இதில் வீரமணியின் ரோலில் மது என்பவர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நீபா என்பவர்நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதை விட கிளாமர் காட்டி கலக்கி வருகிறார்.இந்தப் படத்தில் வீரமணியை பெரிய ஹீரோ போல சித்தரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் காக்கிகள்மத்தியில் கோபம் பரவியுள்ளது.சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இதுகுறித்துக் கூறுகையில், வீரமணி ஒரு ரெளடி, சட்டவிரோதகாரியங்களில் ஈடுபட்டவன். அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை அனைவரும் அறிவார்கள். ஒரு சமூக விரோதியை பெரிய ஹீரோ போல சினிமாவில் சித்தரிப்பது மிகவும் தவறு. காவல்துறையினரை குற்றம் சாட்டுவதுபோலவோ அல்லது வீரமணியை நல்லவன் போலவோ பெருசு படத்தில் சித்தரித்தால் படத்தை நாங்கள் எதிர்ப்போம். அதைத்தடுப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை இறங்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.ஆனால் நடராஜின் கருத்துக்கு மாறாக பெருசு படத்தின் இயக்குனர் காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,வீரமணியின் ஒரு பக்கம்தான் மக்களுக்குத் தெரியும். அவனது மறுபக்கம் குறித்து நாங்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டோம்.அதில் சுவாரஸ்யமான பல தகவல்கள் கிடைத்தன. அதை அடிப்படையாக வைத்துத்தான் பெருசு படத்தை இயக்க முடிவுசெய்தேன்.கிட்டத்தட்ட 2 வருடங்களாக இந்த ஆய்வில் ஈடுபட்டேன். ஒவ்வொரு மனிதனிடம் நல்ல பழக்கங்களும் இருக்கும், கெட்டபழக்கங்களும் இருக்கும். இந்த இரண்டு குணங்களையும் பெருசு படத்தில் காட்டியுள்ளேன். இந்தப் படத்தை வீரமணி வாழ்ந்தபகுதியிலேயே படம் பிடித்துள்ளேன். அப்பகுதியில் வாழ்பவர்களையே நடிக்க வைத்துள்ளேன்.யதார்த்தத்தையும், அதனுடன் சற்று கற்பனையையும் கலந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். வீரமணியைநல்லவனாகவோ அல்லது கெட்டவனாகவோ நான் காட்டவில்லை. ஒரு சினிமா படமாகவே வீரமணியின் கதையைசித்தரித்துள்ளேன். மற்றபடி என்கவுண்டர் தவறு என்றோ அல்லது வீரமணியின் செயல்களை நியாயப்படுத்தியோ ஒரு காட்சிகூட இடம் பெறவில்லை.இந்தப் படத்தில் வீரமணியாக நடிக்கும் மது மிகச் சிறப்பாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது.முழுவதுமாக படம் தயாரானவுடன் கமிஷனர் நடராஜுக்குப் போட்டுக் காட்டுவேன். நிச்சயம் என்னை அவர் பாராட்டுவார்என்றார் காமராஜ்.அதே நேரத்தில் இந்தப் படத்தில் வீரமணியை தூக்கிக் காட்டி போலீசாரை இறக்கிக் காட்டியிருந்தால் படத்துக்குத் தடை வாங்கவெள்ளைத்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.வீரமணி.. செத்தாலும் கலக்குரியேப்பா...

    By Staff
    |

    சென்னையைக் கலங்கடித்துத் திரிந்து மெரீனா கடற்கரையில் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான, தாதாவீரமணியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் பெருசு என்ற திரைப்படம் போலீஸ்அதிகாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

    மெரீனா கடற்கரை அருகே உள்ள அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்தவன் வீரமணி. கட்டப் பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல்-விற்பனை, ஆள் கடத்தல், கொலை, பணம் பறித்தல் என சகல விதமான சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டு வந்தான்.

    தனது மீனவர் சமூகத்தினரை கேடயமாக வைத்துக் கொண்டு இயங்கி வந்தான். இவனது அட்டகாசம் அதிகரிக்கவே,அப்போதைய கமிஷ்னர் விஜய்குமார் இவனுக்கு சமாதி கட்ட முடிவு செய்தார்.


    இவனது கதையை முடிக்கும் வேலையை இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரையிடம் வழங்கினார். வெள்ளைத்துறையும் பிச்சைக்காரர்வேடத்தில் கடற்கரையிலேயே பல மாதங்கள் அலைந்து திரிந்து வீரமணியின் செயல்பாடுகளை கண்காணித்தார்.

    ஒரு நாள் காலையில் வழக்கம்போல் தனது அடிதடி கூட்டாளிகளுடன் படகு மறைவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவீரமணியை வெள்ளைத்துறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பினார். கடற்கரையில் தயாராகக் காத்திருந்தபோலீசார் வெள்ளைத்துறையை பத்திரமாக பிக்-அப் செய்து கொண்டு தப்பினர்.

    வீரமணியின் மிக ஃபேவரிட் ஸ்பாட் ஆன மெரீனா கடற்கரையிலேயே வைத்து அவனை வீழ்த்தினார் வெள்ளத்துரை. இதேவெள்ளத்துரைதான் பின்னர் சந்தனக் கடத்தல் வீரப்பனின் முடிவுக்கும் முக்கியக் காரணமாக அமைந்தார்.

    இலங்கைத் தமிழர் என்ற போர்வையில் வீரப்பனுடன் கடைசி நேரத்தில் ஆம்புலன்சில் அமர்ந்து வந்தவர் வெள்ளைத்துறைதான். இவர் தான் வேனுக்குள் கிரனைட் குண்டை உருட்டிவிட்டு வீரப்பன் கும்பலை நிலை குலையச் செய்தார். இதன் பின்னரேவெளியில் இருந்து போலீசார் துப்பாக்கிளால் வீரப்பனை சல்லடையாக்கினர்.

    இந் நிலையில் செத்துப் போன ரெளடி வீரமணி தற்போது மீண்டும் செய்திகளில் அடிபடத் தொடங்கியுள்ளான். இந்த முறைசினிமா ரூபத்தில்.

    வீரமணியின் கதையை வைத்து பெருசு என்று ஒரு படம் உருவாகி வருகிறது. (வீரமணியை அவனது அடிப்பொடிகள் பெருசுஎன்று தான் கூப்பிடுவார்களாம்) இதில் வீரமணியின் ரோலில் மது என்பவர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நீபா என்பவர்நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதை விட கிளாமர் காட்டி கலக்கி வருகிறார்.

    இந்தப் படத்தில் வீரமணியை பெரிய ஹீரோ போல சித்தரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் காக்கிகள்மத்தியில் கோபம் பரவியுள்ளது.

    சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இதுகுறித்துக் கூறுகையில், வீரமணி ஒரு ரெளடி, சட்டவிரோதகாரியங்களில் ஈடுபட்டவன். அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

    ஒரு சமூக விரோதியை பெரிய ஹீரோ போல சினிமாவில் சித்தரிப்பது மிகவும் தவறு. காவல்துறையினரை குற்றம் சாட்டுவதுபோலவோ அல்லது வீரமணியை நல்லவன் போலவோ பெருசு படத்தில் சித்தரித்தால் படத்தை நாங்கள் எதிர்ப்போம். அதைத்தடுப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை இறங்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.

    ஆனால் நடராஜின் கருத்துக்கு மாறாக பெருசு படத்தின் இயக்குனர் காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,வீரமணியின் ஒரு பக்கம்தான் மக்களுக்குத் தெரியும். அவனது மறுபக்கம் குறித்து நாங்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டோம்.அதில் சுவாரஸ்யமான பல தகவல்கள் கிடைத்தன. அதை அடிப்படையாக வைத்துத்தான் பெருசு படத்தை இயக்க முடிவுசெய்தேன்.


    கிட்டத்தட்ட 2 வருடங்களாக இந்த ஆய்வில் ஈடுபட்டேன். ஒவ்வொரு மனிதனிடம் நல்ல பழக்கங்களும் இருக்கும், கெட்டபழக்கங்களும் இருக்கும். இந்த இரண்டு குணங்களையும் பெருசு படத்தில் காட்டியுள்ளேன். இந்தப் படத்தை வீரமணி வாழ்ந்தபகுதியிலேயே படம் பிடித்துள்ளேன். அப்பகுதியில் வாழ்பவர்களையே நடிக்க வைத்துள்ளேன்.

    யதார்த்தத்தையும், அதனுடன் சற்று கற்பனையையும் கலந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். வீரமணியைநல்லவனாகவோ அல்லது கெட்டவனாகவோ நான் காட்டவில்லை. ஒரு சினிமா படமாகவே வீரமணியின் கதையைசித்தரித்துள்ளேன். மற்றபடி என்கவுண்டர் தவறு என்றோ அல்லது வீரமணியின் செயல்களை நியாயப்படுத்தியோ ஒரு காட்சிகூட இடம் பெறவில்லை.

    இந்தப் படத்தில் வீரமணியாக நடிக்கும் மது மிகச் சிறப்பாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது.முழுவதுமாக படம் தயாரானவுடன் கமிஷனர் நடராஜுக்குப் போட்டுக் காட்டுவேன். நிச்சயம் என்னை அவர் பாராட்டுவார்என்றார் காமராஜ்.

    அதே நேரத்தில் இந்தப் படத்தில் வீரமணியை தூக்கிக் காட்டி போலீசாரை இறக்கிக் காட்டியிருந்தால் படத்துக்குத் தடை வாங்கவெள்ளைத்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    வீரமணி.. செத்தாலும் கலக்குரியேப்பா...

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X