அப்படியே, அப்பாம்மா மாதிரியே...!
சென்னை: திரை நட்சத்திரங்களின் வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்து கொள்வதில் நம் மக்களுக்கு அவ்வளவு ஆர்வம் என்றால் அது மிகையாகாது.
பாலிவுட்டோ, கோலிவுட்டோ எந்த உட்டாக இருந்தாலும் அதில் நடிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள் குறித்த செய்தியையோ அவர்களின் புகைப்படத்தையோ பார்க்க வேண்டும் என்றால் நம் மக்களுக்கு அலாதி பிரியம்.

மகள்களுடன் கமல்
உலக நாயகனுக்கு மனைவி சரிகாவுடன் ஸ்ருதி, அக்ஷரா என்று 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் அம்மாவைப் போன்று தான் உள்ளனர்.

மகனுடன் விஜய், சங்கீதா
இளைய தளபதி விஜயின் மகன் சஞ்சயை நீங்கள் திரைப்படத்திலேயே பார்த்திருப்பீர்கள். அப்பாவுடன் வந்து டான்ஸ் ஆடிவிட்டு சென்றிருக்கிறார். விஜய் மற்றும் சங்கீதாவின் ஜாடையை சேர்த்து பிறந்துள்ளார் சஞ்சய்.

செல்ல மகளுடன் அஜீத், ஷாலினி
அஜீத் குமாரின் செல்ல மகள் அனோஷ்கா அப்பாவைப் போன்றும், அம்மாவைப் போன்றும் உள்ளார். வளர, வளர அம்மா ஷாலினி ஜாடை தான் அதிகம் தெரிகிறது.

தியாவுடன் சூர்யா, ஜோதிகா
சூர்யா, ஜோதிகாவின் பாச மகள் தியா அம்மா மாதிரி தான் இருக்கிறார். தியா சித்தப்பா கார்த்தியின் செல்லமாம்.

ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா
ஜஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா வரும் 16ம் தேதி தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அழகான குட்டி ஐஸ் வேண்டும் என்று அபிஷேக் பச்சன் ஆசைப்பட்டது போன்று ஆராத்யா பிறந்திருக்கிறாள்.
பிள்ளைகள் பெத்தவங்கள மாதிரி தானே இருக்கும் என்று கூறுகிறீர்களா? சில குழந்தைகள் அப்பா, அம்மா ஜாடையைக் கலந்து புது ஜாடையுடன் இருக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.


Click it and Unblock the Notifications











