பிசாசு 2 ஆண்ட்ரியாவின் திரை வாழ்க்கையில் பெஸ்ட் படமாக இருக்கும்.. இயக்குநர் மிஷ்கின்!
சென்னை : தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் இயக்குநர் மிஷ்கின்
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இப்பொழுது அதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது இதில் ஆண்ட்ரியா லீட் ரோலில் நடித்து வருகிறார்
எப்போதும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஆண்ட்ரியாவுக்கு பிசாசு 2 பெஸ்ட் படமாக இருக்கும் என மிஷ்கின் தனியார் சேனல் நேர்காணலில் கூறியுள்ளார்.

இயக்குநர் மிஷ்கின்
சித்திரம் பேசுதடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக வெளியாகி வருகிறது ஒரே மாதிரி படங்களை செய்யாமல் தனக்கென ஒரு ஸ்டைலை அமைத்துக் கொண்டு ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி கண்டு வருகிறது.

பேய் தேவதையாக
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஹாரர் படம் பிசாசு. இந்திய சினிமாவில் இதுவரை பல பேய் படங்கள் வெளியாகியிருந்தாலும் பிசாசு திரைப்படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான படமாக இருப்பதால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பொதுவாக பேய் என்றால் அனைவரையும் பயமுறுத்தி மிரட்டும் கொல்லும் என காட்டப்பட்டு வந்த சூழலில் பிசாசு படத்தில் பேய் தேவதையாக மிஸ்கின் காட்டி இருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது

ஹாரர் த்ரில்லர் கதை
இப்பொழுது பிசாசு 2ல் நடிகை ஆண்ட்ரியா லீட் ரோலில் நடித்து வருகிறார் ஹாரர் த்ரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து விஜய் சேதுபதி ,சந்தோஷ் பிரதாப், அஜ்மல், பூர்ணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் திண்டுக்கல்லில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து இப்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது

பெஸ்ட் படமாக இருக்கும்
பிசாசு 2 கட்டாயமாக வித்தியாசமான படைப்பாக இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் பிசாசு 2 திரைப்படம் நடிகை ஆன்ட்ரியாவின் திரைவாழ்க்கையில் பெஸ்ட் படமாக இருக்கும். அந்த அளவிற்கு ஆண்ட்ரியாவின் நடிப்பு இந்தப் படத்தில் பெரிதாக பேசப்படும் என இயக்குநர் மிஷ்கின் தனியார் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதை பார்த்தால் பிசாசு 2 திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் இருக்கும் போலயே என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications