»   »  விபச்சாரம் - மலையாள நடிகை ரேஷ்மா கைது

விபச்சாரம் - மலையாள நடிகை ரேஷ்மா கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

விபச்சாரம் செய்ததாக பலான மலையாள நடிகை ரேஷ்மாவை கேரள போலீஸார் கைது செய்தனர்.

பல்வேறு பலான மலையாளப் படங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருப்பவர் ரேஷ்மா. அவர் படு பச்சையாக நடித்த படங்கள் கேரளாவில் மட்டுமல்லாது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் என எல்லை தாண்டியும் பரபரப்பாக ஓடுவது வழக்கம்.

ஷகீலா பலான படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட பின்னர் ரேஷ்மா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் கொச்சி, கக்கநாடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் செய்ததாக ரேஷ்மா உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் மட்டுமே ஆண்கள். மற்றவர்கள் பெண்கள்.

அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடத்தி வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கக்கநாடு பகுதியில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் பணியாற்றுபவர்களை குறி வைத்து இங்கு விபச்சாரம் நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீட்டை மாதம் ரூ. 14 ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த விபச்சாரக் கும்பலில் ரேஷ்மாதான் முதன்மையான ராணியாக இருந்துள்ளார். அவர் தவிர மேலும் சிம்ரன், ரம்யா ஆகிய 2 பெண்களும் இந்தக் குழுவில் முக்கியமானவர்களாக இருந்துள்ளனர்.

இவர்கள் ஒரு நாள் இரவு உல்லாசமாக இருக்க ரூ. 25 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர். இதில் பாதி பணத்தை ஏற்பாடு செய்யும் புரோக்கர்களுக்குக் கொடுத்து விட வேண்டுமாம். டிப்ஸ்கள் தனி.

போலீஸார் ரெய்டுக்கு வந்தபோது, ரேஷ்மா உள்ளிட்ட விபச்சாரப் பெண்கள் நீச்சல் குளத்தில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனராம். அன்று இரவு பெங்களூருக்குப் போக ரேஷ்மா திட்டமிட்டிருந்தாராம்.

ரேஷ்மாவுக்கும், சிம்ரனுக்கும் பெங்களூர்தான் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ரேஷ்மா, 3 ஆண்டுளாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பல பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு இதே கொச்சியில்தான் சபரிமலை தந்திரியை விபச்சாரப் பெண் சாந்தாவுடன் ஆபாச கோலத்தில் இருப்பதாக படம் எடுத்து மிரட்டி பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil