Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கட்டுக்கடங்காத ரசிகர்கள்... போலீஸ் தடியடி!

ஆரம்பத்தில் மிகுந்த கட்டுப்பாடாக நடந்து கொண்டனர் ரசிகர்கள். குறிப்பாக விமான நிலையப் பகுதியில் போலீசாருக்கு வேலை வைக்காமல் சுயமாக தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொண்டனர்.
ஆனால் ரஜினி எந்த வாயிலில் வருகிறார் என்று கடைசி வரை ரகசியம் காத்த போலீசார், 9.20 மணிக்குப் பிறகே உண்மையைத் தெரிவித்தனர்.
இதனால் அடித்துப் பிடித்துக் கொண்டு கார்கோ பகுதி வாயிலுக்கு சென்றனர். பிரதமர், முதல்வர் போன்ற முக்கிய பிரமுகர்கள் இந்த வழியாகத்தான் விமான நிலையத்துக்குள் செல்வார்கள்.
ரஜினி வருகையையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ரஜினி வந்த போது, இந்த போலீஸால் கூட அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ரசிகர்களிடம் பேச நடந்த வந்த ரஜினியால், பேச முடியாத சூழல் ஏற்பட்டது.
காரில் ஏறிப் புறப்பட்ட அவரை, மறித்துநின்ற ரசிகர்கள், அவரை அருகில் போய் பார்க்க முயன்றனர். இதனால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது,
ரஜினி பயணித்த காரின் பேனட் உடைந்தது. காரின் வைப்பர்களும் பிய்ந்தன. காரை ஒரு அடி கூட நகரவிடாமல் ஒரு கூட்டம் தடுத்ததால் கடுப்பான போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்தனர். ஒரு ரசிகருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.மேலும் சிலருக்கு வெளியில் தெரியாவிட்டாலும் உள்காயம் ஏற்பட்டது.
இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே ரஜினி பெரும்பாலும் தனது பயணத் திட்டங்களை மீடியாவின் வெளிச்சத்துக்கு வராமல் பார்த்துக் கொள்கிறார் என்றார் ரஜினியின் உதவியாளர்.