சிக்கலில் சிரஞ்சீவி 'புது மருமகன்'

By Staff

சிரஞ்சீவியின் 'புது மருமகன்' சிரீஷ் பரத்வாஜ் மீதான பழைய வழக்கை ஹைதராபாத் போலீஸார் தோண்டி எடுத்துள்ளனர். இந்த வழக்கின் கீழ் பரத்வாஜைக் கைது செய்யவும் தீவிரமாக அவரைத் தேடி வருகின்றனர்.

Click here for more images

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பம் பெரும் அதிர்ச்சியில் மூழ்கயுள்ளது. சிரஞ்சீவியின் 2வது மகள் ஸ்ரீஜா, தனது வீட்டை விட்டு வெளியேறி காதலர் சிரீஷ் பரத்வாஜைக் கல்யாணம் செய்து கொண்டதால் சிரஞ்சீவியின் குடும்பம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது.

ஸ்ரீஜாவை சிரஞ்சீவி குடும்பத்தினர் தேடி வருகின்றனர். அதேபோல, ஸ்ரீஜாவின் கணவரான பரத்வாஜை போலீஸார் தேடி வருகின்றனர். பரத்வாஜ் சம்பந்தப்பட்ட பழைய வழக்கில் அவரை போலீஸார் தேடி வருகின்றனராம்.

கடந்த 2002ம் ஆண்டு ஹைதராபாத்தில் ஒரு பெண்ணைக் கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார் பரத்வாஜ். அந்தப் பெண்ணுக்கு அப்போது வயது 16. அப்பெண்ணுடன் பரத்வாஜ் ஒரு லாட்ஜுக்கு அருகில் இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டார்

அந்தப் பெண்ணை பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார், பரத்வாஜ் மீது கடத்தல் வழக்கைத் தொடர்ந்தனர். கைது செய்யப்பட்ட பரத்வாஜ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். ஆனால் பரத்வாஜுக்கு எதிராக அந்தப் பெண் சாட்சியம் அளிக்க முன் வராததால் பரத்வாஜ் வழக்கிலிருந்து விடுதலை ஆனார்.

தற்போது இந்த வழக்கை போலீஸார் தோண்டி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தனது மகளின் காதல் கல்யாணத்தை இதுவரை சிரஞ்சீவி அங்கீகரித்ததாக தெரியவில்லை. எனவே அவரது தூண்டுதலின் பேரில் போலீஸ் தரப்பில் பழைய வழக்கு தோண்டப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சிரஞ்சீவி மகளுடன் காதல் வேண்டாம் என்று தனது மகனுக்கு அறிவுரை கூறியதாகவும், ஆனால் காதலில் உறுதியாக இருந்த தனது மகன் அதை ஏற்கவில்லை என்றும் பரத்வாஜின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், 3 மாதங்களுக்கு முன்பே இது எனக்குத் தெரியும். சிரஞ்சீவியின் பின்னணி குறித்து பயந்த நான் எனது மகனிடம் காதலை விட்டு விடுமாறு கூறினேன். ஆனால் அதை எனது மகன் ஏற்கவில்லை.

சிரஞ்சீவியின் ரசிகர்களால் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற பயத்தில் நானும், எனது மனைவியும் உறவினர் வீட்டில் தங்கியுள்ளோம் என்றார் ராமமூர்த்தி.

முன்னதாக போலீஸ் பாதுகாப்பு தேவை என்று கேட்டிருந்த ஸ்ரீஜாவும், பரத்வாஜும், அது கிடைக்காமல் போகலாம் என்ற சந்தேகத்தில், ஆந்திராவை விட்டு வெளியேறி தற்போது சென்னைக்குப் பறந்து விட்டதாக கூறப்படுகிறது.

சென்னை போலீஸாரிடம் அவர்கள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: chiranjeevi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X