twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காவேரி-வைத்தி கல்யாணம் 'கன்பர்ம்ட்'!

    By Staff
    |

    Cauvery
    நடிகை காவேரிக்கும், ஒளிப்பதிவாளர் வைத்தி என்கிற வைத்தியலிங்கத்திற்கும் இடையே கல்யாணம் நடந்தது, அவர்கள் இருவரும் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தியது உண்மைதான் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம். எனவே இருவரையும் சேர்த்து வைக்க போலீஸ் தரப்பில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    வைகாசிப் பொறந்தாச்சு பட நாயகி காவேரி சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரனை சந்தித்து, தனது கணவர் ஒளிப்பதிவாளர் வைத்தி, தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு இப்போது தனது மாமன் மகளைக் கல்யாணம் செய்து கொள்ள முயல்வதாகவும், அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கோரி மனு கொடுத்தார்.

    இந்த புகார் மனு மீது திருமங்கலம் உதவி கமிஷனர் அழகுசோலைமலை தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரஷீத் ஆகியோர் அடங்கிய தனிப் படையினரும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையால் திருச்சி கீரனூரில் நடிகை காவேரியின் கணவர் வைத்திக்கு நடை பெற இருந்த 2-வது திருமணம் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை உதவி கமிஷனர் அழகு சோலைமலை முன்பு விசாரணைக்காக காவேரி ஆஜரானார்.

    அவரிடம் சுமார் 30 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவரிடம் திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களை கொடுங்கள் என்று கேட்டனர். ஆனால் திருமணம் சம்பந்தமான எந்த ஆதாரத்தையும் அவர் தரவில்லை. மேலும், தனது வீட்டில் சாமி படத்திற்கு முன்பு இருவரும் கல்யாணம் செய்து கொண்டதாகவும், தம்பதி சமேதராக அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள மற்ற வீடுகளுக்குச் சென்று ஆசி பெற்றதாகவும் கூறியிருந்தார் காவேரி.

    10 ஆண்டுகளாக என்னுடன் பழகிய வைத்தி, என்னை காதலித்த நேரத்திலும் சரி, திருமணம் செய்து கொண்ட பின்னரும் சரி புகைப்படங்கள் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

    புகைப்படம் உள்ளிட்ட எந்த ஆதாரமும் இல்லாததால் போலீஸார் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிீத்தனர். இந்த நிலையில் காவேரி கூறியதுபோல அவரது அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் உள்ளவர்களிடம் விசாரித்துப் பார்க்க தீர்மானித்தனர்.

    வளசரவாக்கம் பெத்தானியா நகரில் தனது தாய் வீட்டில் தான் காவேரி முதலில் வசித்து வந்தார். அப்போது கே.கே. நகர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். தெருவில் வைத்தி வசித்து வந்தார். அப்போதே இருவருக் கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த 2 இடங்களுக்கும் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் முகப்பேரில் தற்போது காவேரி வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது.

    அங்கிருந்த அனைவரும் காவேரியும், வைத்தியும் கணவன்- மனைவியாக குடும்பம் நடத்தியதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களை சாட்சிகளாக சேர்க்க காவல்துறை முடிவு செய்துள்ளதாம்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், இருவரும் கணவன்- மனைவியாக வாழ்ந்ததாக கூறப்படும் முகப்பேர் அடுக்கு மாடி குடியிருப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு வசிப்பவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளது உறுதியாகி உள்ளது.

    வைத்தியுடன் சேர்ந்து வாழ்ந்தால் போதும் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில்தான் காவேரி உள்ளார்.

    எனவே இருவரையும் சேர்த்து வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள் வோம். இதில் உடன்பாடு ஏற் படாத பட்சத்தில்தான் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    முன்ஜாமீன் மறுப்பு:

    இதற்கிடையே, வைத்திக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

    முன்ஜாமீன் கோரி வைத்தி தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவேரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணக்குமார், வைத்திக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதாடினார்.

    இதை ஏற்ற நீதிபதி வைத்தி மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காவேரிக்கும், காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதுவரை போலீஸார் கைது செய்யக் கூடாது என தடை விதிக்குமாறு வைத்தியின் வழக்கறிஞர் கோரினார். ஆனால் அதை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

    Read more about: kaveri
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X