தீபாவளிக்கு பொல்லாதவன்
தனுஷ், குத்து ரம்யா (இப்போ திவ்யா) இணைந்து உலுக்கியிருக்கும் பொல்லாதவன் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
| Click here for more images |
சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படம் பொல்லாதவன். அதே டைட்டிலில் இப்போது உருவாகியிருப்பது பொல்லாதவன். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் தனுஷ் நாயகனாக கலக்கியுள்ளார். ஜோடிக்கு திவ்யா.
ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை தீபாவளிக்குத் திரைக்குக் கொண்டு வருகிறார்கள். தீபாவளிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த அஜீத்தின் பில்லா திரைக்கு இப்போது வரவில்லையாம்.
ஏற்கனவே விஜய்யின் அழகிய தமிழ் மகன், சூர்யாவின் வேல், சத்யராஜ், பிருத்விராஜின் கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்கள் தீபாவளிக்கு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது தனுஷின் பொல்லாதவனும் இணைந்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications