பொங்கல் சினிமா தித்திக்கும் பொங்கல், சுவையான கரும்புடன், ரசித்துப் பார்க்க ஏராளமான திரைப்படங்களும் ரிலீஸ் ஆகின்றன.ஏகப்பட்ட படங்கள் வரிசையில் காத்திருந்தாலும், விஜய்யின் ஆதி, அஜீத்தின் பரமசிவம், விஜயகாந்த்தின் பேரரசு, சிம்புவின்சரவணா, பிரபுவின் பாசக்கிளிகள் ஆகிய ஐந்து படங்கள் ரிலீஸ் ஆவதுதான் உறுதியாகியுள்ளது.பொங்கல் படங்களைப் பற்றிய ஒரு பார்வை ..வர்றான் வர்றான் ஆதி, இவன் வரிப்புலி ஜாதிதீபாவளிக்கு வந்த சிவகாசியே இன்னும் வெடித்துக் கொண்டுள்ள நிலையில், பொங்கலுக்கு ஆதியை கூட்டி வந்துள்ளார் விஜய்.வர்றான் வர்றான் ஆதி, இவன் வரிப்புலி ஜாதி என்று வழக்கமான டிப்பிக்கல் பஞ்ச் பாட்டுடன் விஜய் அறிமுகமாகும் காட்சி,விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான ஸ்பெஷல்.தெலுங்கு ரீமேக் ஆன ஆதியில், விஜய்க்கு ஜோடி த்ரிஷா. கில்லியைப் போல ஆதியும் தனக்கு பெரிய ஹிட்டாக அமையும் எனத்ரிஷா நம்பிக்கையுடன் உள்ளார்.விஜய்யின் அப்பாவான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரா புதிதாக ஆரம்பித்துள்ள சூரியன் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்தயாராகியுள்ள முதல் படம் ஆதி. விஜய், த்ரிஷா தவிர விவேக், சாய்குமார். பிரகாஷ்ராஜ், விஜயகுமார், நாசர், மணிவண்ணன்,லிவிங்ஸ்டன், ராஜ்கபூர், ராஜன் பி.தேவ், சீதா, தாமு என நட்சத்திரக் குவியலே உள்ளது. இசை வித்யாசாகர். இயக்கம் ரமணா.பெரிய திரைக்கு எஸ்.ஏ.சி வந்து இது 25வது ஆண்டு. சில்வர் ஜூப்ளி வருடத்தில் அவர் தயாரித்துள்ள இப்படம் வெற்றியைத்தருமா, விஜய்யின் வெற்றி பவனி தொடருமா என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.சுப்பிரமணிய சிவா, ஈஸ்வர், பரமசிவன்...அஜீத் ரொம்பவே நம்பியுள்ள படம் பரமசிவன். சந்திரமுகி என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்த சூட்டோடு பி.வாசுஇயக்கியுள்ள படம்.தொடர்ந்து தோல்விப் படங்களையேக் கொடுத்து வரும் அஜீத், இப்படத்திற்காக மிகவும் மெனக்கெட்டுள்ளார், கடுமையாகஉழைத்துள்ளார், சிறப்பாகவும் நடித்துள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.அஜீத்துக்கு ஜோடி லைலா. கல்யாணத்திற்கு முன்பு அவர் நடித்த கடைசிப் படம் என்ற போனஸ் பெருமையும் இப்படத்திற்குஉண்டு. பிரகாஷ்ராஜ், விவேக், அவிநிாஷ், சிவராம் என பலரும் படத்தில் உள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வருகிறார் ஜெயராம்.இந்தப் படத்தில் அஜீத்திற்கு, சுப்பிரமணிய சிவா, ஈஸ்வர், பரமசிவன் என மூன்று கெட்டப்புகள். ஒரு அஜீத் தூக்கு தண்டனைகைதியாக நடித்துள்ளார். படத்தின் ஹைலைட்டாக, அஜீத் நிஜமாகவே கலந்து கொண்ட பைக் ரேஸும் வருகிறதாம்.இசை வித்யாசாகர், கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் பி.வாசு. பைக் ரேஸில் வல்லவரான அஜீத், பொங்கல்ரேஸிலும் வெல்வாரா?அட்வைஸ் பேரரசுஅரசியல்வாதியாக அவதாரம் எடுத்த பின்னர் வெளியாகும் முதல் விஜயகாந்த் படம் என்ற பெருமையைப் பெறுகிறது பேரரசு.ஏகப்பட்ட நஷ்டப்பட்டு, தற்கொலைக்கு முயன்ற காஜாமைதீன் தயாரித்துள்ள (இப்போதைக்கு!) கடைசிப் படம். உதயன் என்றபுதியவர் படத்தை இயக்கியுள்ளார் (இவரது ஒரிஜினல் பெயர் ராமதாஸ். ஆனால் டாக்டர் ராமதாஸ் மீதான வெறுப்பால்கேப்டன்தான் உதயன் என்று பெயரை மாற்ற வைத்தாராம்)அரசியல் களத்தில் குதித்துள்ளதால் ரசிகர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏகப்பட்ட அட்வைஸ்களை இப்படத்தில் அள்ளித்தெளித்துள்ளாராம் விஜயகாந்த். படம் முழுக்க ஒரே பஞ்ச்சாம்.சிபிஐ அதிகாரியாக இதில் வருகிறார் விஜயகாந்த். நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை தனி மனிதனாக (வழக்கம்போல்)எதிர்த்துப் போராடி அக்கிரமக்காரர்களை அழிப்பதுதான் இதில் விஜயகாந்த்தின் தலையாய வேலையாம். வழக்கமானவிஜயகாந்த் படமாக இருக்கும் என்று தைரியமாக நம்பலாம்.சரவணா, இன்னொரு மன்மதன்மன்மதன் ஜோடி சிம்பு-ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் சரவணாவை, தெய்வானை மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தயாரித்துள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். பத்ரா தெலுங்கு படத்தின் ரீமேக் இது.ரவிக்குமாரின் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் இரண்டாவது படம் இது, சிம்புவுக்கு முதல் படம். ரீமேக் படம் மாதிரி இல்லாமல்,தனது பாணியில் படத்தை விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கிறாராம் இயக்குனர்.மன்மதனுக்கு முன்பு, மன்மதனுக்குப் பின்பு என சிம்புவின் ரேஞ்சே மாறியிருப்பதால் அவரது ரசிகர்களை ஏமாற்றாத வகையில்படத்தை இயக்கியுள்ளார் ரவிக்குமார். படம் முடியும் தருவாயில், மொத்தப் படத்தையும் அவுட் ரேட் விலைக்கு சிம்பு வாங்கிவிட்டதால், கடைசிக் கட்டத்தில் சிம்புவின் தலையீடு அதிகமாக இருந்ததாகப் பேச்சு எழுந்தது.சிம்புவின் வற்புறுத்தல் காரணமாக மேக்னா நாயுடுவின் குத்தாட்டம் படு சூடாக சுடப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு இது செமவிருந்தாக அமையும். சிம்புவுடன் சேர்ந்து காமடியில் கலக்கியுள்ளார் விவேக். ஸ்ரீகாந்த் தேவா இசை. பாட்டுக்கள் அத்தனையும்துள்ளல் ரகமாம்.பாட்டுக்களைப் போட்டுள்ளவர் வாலிபக் கவி வாலி. மேக்னா நாயுடுவின் குத்துப் பாட்டை வாலிதான் எழுதியுள்ளாராம்.கேட்பவர்கள் அசந்து போய் விடும் அளவுக்கு பாட்டில் அத்தனை இளமை.சிம்புவுக்கு சரவணா, இன்னொரு மன்மதனாக அமையலாமாம்.கருணாநிதியின் பாசக்கிளிகள்அஞ்சுகம் கலைக்கூடம் சார்பில் இயக்குனர் ராம. நாராயணன் தயாரித்துள்ள பாசக்கிளிகளும், பொங்கல் களத்தில் குதித்துள்ளது.பிரபு, முரளி சகோதரர்களாக நடிக்க அவர்களது அன்புத் தங்கையாக வருகிறார் நவ்யா நாயர். பிரபுவுக்கு ஜோடியாக மாளவிகா.திமுக தலைவர் கருணாநிதி கதை, திரைக் கதையோடு இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளார். வித்யாசாகரின் இசையில் இந்தப்பாடல்கள் வித்தியாசமாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. வைரமுத்துவும் பாடல்களை எழுதியிருக்கிறார்.வினீத், ரோஜா, மனோரமா, கலாபவன் மணி, நாசர், வடிவே

By Staff

தித்திக்கும் பொங்கல், சுவையான கரும்புடன், ரசித்துப் பார்க்க ஏராளமான திரைப்படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

ஏகப்பட்ட படங்கள் வரிசையில் காத்திருந்தாலும், விஜய்யின் ஆதி, அஜீத்தின் பரமசிவம், விஜயகாந்த்தின் பேரரசு, சிம்புவின்சரவணா, பிரபுவின் பாசக்கிளிகள் ஆகிய ஐந்து படங்கள் ரிலீஸ் ஆவதுதான் உறுதியாகியுள்ளது.

பொங்கல் படங்களைப் பற்றிய ஒரு பார்வை ..

வர்றான் வர்றான் ஆதி, இவன் வரிப்புலி ஜாதி


தீபாவளிக்கு வந்த சிவகாசியே இன்னும் வெடித்துக் கொண்டுள்ள நிலையில், பொங்கலுக்கு ஆதியை கூட்டி வந்துள்ளார் விஜய்.

வர்றான் வர்றான் ஆதி, இவன் வரிப்புலி ஜாதி என்று வழக்கமான டிப்பிக்கல் பஞ்ச் பாட்டுடன் விஜய் அறிமுகமாகும் காட்சி,விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான ஸ்பெஷல்.

தெலுங்கு ரீமேக் ஆன ஆதியில், விஜய்க்கு ஜோடி த்ரிஷா. கில்லியைப் போல ஆதியும் தனக்கு பெரிய ஹிட்டாக அமையும் எனத்ரிஷா நம்பிக்கையுடன் உள்ளார்.

விஜய்யின் அப்பாவான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரா புதிதாக ஆரம்பித்துள்ள சூரியன் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்தயாராகியுள்ள முதல் படம் ஆதி. விஜய், த்ரிஷா தவிர விவேக், சாய்குமார். பிரகாஷ்ராஜ், விஜயகுமார், நாசர், மணிவண்ணன்,லிவிங்ஸ்டன், ராஜ்கபூர், ராஜன் பி.தேவ், சீதா, தாமு என நட்சத்திரக் குவியலே உள்ளது. இசை வித்யாசாகர். இயக்கம் ரமணா.

பெரிய திரைக்கு எஸ்.ஏ.சி வந்து இது 25வது ஆண்டு. சில்வர் ஜூப்ளி வருடத்தில் அவர் தயாரித்துள்ள இப்படம் வெற்றியைத்தருமா, விஜய்யின் வெற்றி பவனி தொடருமா என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.

சுப்பிரமணிய சிவா, ஈஸ்வர், பரமசிவன்...


அஜீத் ரொம்பவே நம்பியுள்ள படம் பரமசிவன். சந்திரமுகி என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்த சூட்டோடு பி.வாசுஇயக்கியுள்ள படம்.

தொடர்ந்து தோல்விப் படங்களையேக் கொடுத்து வரும் அஜீத், இப்படத்திற்காக மிகவும் மெனக்கெட்டுள்ளார், கடுமையாகஉழைத்துள்ளார், சிறப்பாகவும் நடித்துள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

அஜீத்துக்கு ஜோடி லைலா. கல்யாணத்திற்கு முன்பு அவர் நடித்த கடைசிப் படம் என்ற போனஸ் பெருமையும் இப்படத்திற்குஉண்டு. பிரகாஷ்ராஜ், விவேக், அவிநிாஷ், சிவராம் என பலரும் படத்தில் உள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வருகிறார் ஜெயராம்.

இந்தப் படத்தில் அஜீத்திற்கு, சுப்பிரமணிய சிவா, ஈஸ்வர், பரமசிவன் என மூன்று கெட்டப்புகள். ஒரு அஜீத் தூக்கு தண்டனைகைதியாக நடித்துள்ளார். படத்தின் ஹைலைட்டாக, அஜீத் நிஜமாகவே கலந்து கொண்ட பைக் ரேஸும் வருகிறதாம்.

இசை வித்யாசாகர், கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் பி.வாசு. பைக் ரேஸில் வல்லவரான அஜீத், பொங்கல்ரேஸிலும் வெல்வாரா?

அட்வைஸ் பேரரசு


அரசியல்வாதியாக அவதாரம் எடுத்த பின்னர் வெளியாகும் முதல் விஜயகாந்த் படம் என்ற பெருமையைப் பெறுகிறது பேரரசு.

ஏகப்பட்ட நஷ்டப்பட்டு, தற்கொலைக்கு முயன்ற காஜாமைதீன் தயாரித்துள்ள (இப்போதைக்கு!) கடைசிப் படம். உதயன் என்றபுதியவர் படத்தை இயக்கியுள்ளார் (இவரது ஒரிஜினல் பெயர் ராமதாஸ். ஆனால் டாக்டர் ராமதாஸ் மீதான வெறுப்பால்கேப்டன்தான் உதயன் என்று பெயரை மாற்ற வைத்தாராம்)

அரசியல் களத்தில் குதித்துள்ளதால் ரசிகர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏகப்பட்ட அட்வைஸ்களை இப்படத்தில் அள்ளித்தெளித்துள்ளாராம் விஜயகாந்த். படம் முழுக்க ஒரே பஞ்ச்சாம்.

சிபிஐ அதிகாரியாக இதில் வருகிறார் விஜயகாந்த். நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை தனி மனிதனாக (வழக்கம்போல்)எதிர்த்துப் போராடி அக்கிரமக்காரர்களை அழிப்பதுதான் இதில் விஜயகாந்த்தின் தலையாய வேலையாம். வழக்கமானவிஜயகாந்த் படமாக இருக்கும் என்று தைரியமாக நம்பலாம்.

சரவணா, இன்னொரு மன்மதன்


மன்மதன் ஜோடி சிம்பு-ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் சரவணாவை, தெய்வானை மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தயாரித்துள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். பத்ரா தெலுங்கு படத்தின் ரீமேக் இது.

ரவிக்குமாரின் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் இரண்டாவது படம் இது, சிம்புவுக்கு முதல் படம். ரீமேக் படம் மாதிரி இல்லாமல்,தனது பாணியில் படத்தை விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கிறாராம் இயக்குனர்.

மன்மதனுக்கு முன்பு, மன்மதனுக்குப் பின்பு என சிம்புவின் ரேஞ்சே மாறியிருப்பதால் அவரது ரசிகர்களை ஏமாற்றாத வகையில்படத்தை இயக்கியுள்ளார் ரவிக்குமார். படம் முடியும் தருவாயில், மொத்தப் படத்தையும் அவுட் ரேட் விலைக்கு சிம்பு வாங்கிவிட்டதால், கடைசிக் கட்டத்தில் சிம்புவின் தலையீடு அதிகமாக இருந்ததாகப் பேச்சு எழுந்தது.

சிம்புவின் வற்புறுத்தல் காரணமாக மேக்னா நாயுடுவின் குத்தாட்டம் படு சூடாக சுடப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு இது செமவிருந்தாக அமையும். சிம்புவுடன் சேர்ந்து காமடியில் கலக்கியுள்ளார் விவேக். ஸ்ரீகாந்த் தேவா இசை. பாட்டுக்கள் அத்தனையும்துள்ளல் ரகமாம்.

பாட்டுக்களைப் போட்டுள்ளவர் வாலிபக் கவி வாலி. மேக்னா நாயுடுவின் குத்துப் பாட்டை வாலிதான் எழுதியுள்ளாராம்.கேட்பவர்கள் அசந்து போய் விடும் அளவுக்கு பாட்டில் அத்தனை இளமை.

சிம்புவுக்கு சரவணா, இன்னொரு மன்மதனாக அமையலாமாம்.

கருணாநிதியின் பாசக்கிளிகள்


அஞ்சுகம் கலைக்கூடம் சார்பில் இயக்குனர் ராம. நாராயணன் தயாரித்துள்ள பாசக்கிளிகளும், பொங்கல் களத்தில் குதித்துள்ளது.பிரபு, முரளி சகோதரர்களாக நடிக்க அவர்களது அன்புத் தங்கையாக வருகிறார் நவ்யா நாயர். பிரபுவுக்கு ஜோடியாக மாளவிகா.

திமுக தலைவர் கருணாநிதி கதை, திரைக் கதையோடு இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளார். வித்யாசாகரின் இசையில் இந்தப்பாடல்கள் வித்தியாசமாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. வைரமுத்துவும் பாடல்களை எழுதியிருக்கிறார்.

வினீத், ரோஜா, மனோரமா, கலாபவன் மணி, நாசர், வடிவே

நடனம் - சிவசங்கர், கலா, ஸ்ரீதர். சண்டைக்கு சூப்பர் சுப்பராயன், ஒளிப்பதிவுக்கு பன்னீர் செல்வம். படத்தை அமிர்தம்இயக்கியிருக்கிறார்.

More from Filmibeat

Read more about: pongal release movies
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X