பூச்சாண்டி பூனம்! நீண்ண்..........ட காலமாக எடுக்கப்பட்டு வந்த ஒளி படத்தின் நாயகி பூனம் காட்டும்பூச்சாணி வேலைகளால் யூனிட்டே கடுப்பாகிக் கிடக்கிறது.முரளி ரொம்ப காலத்துக்கு முன் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த படம் ஒளி. இது அவர்அதிமுகவில் சேர்ந்து மாபெரும் தலைவராக உயர்வதற்கு முன் இந்தப் படத்தில் புக்ஆனார் (இல்லாட்டி இந்தப் படமும் கிடைத்திருக்காது!).இதில் முருங்கைக்காய் பாக்யராஜ் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். ஒளிச்சந்திரன் (இன்னாபேரு நைனா இது?) படத்தை ஒளிக்கிறார் .. ஸாரி ... இயக்குகிறார்.பூனம் என்ற நடிகை சின்னப் புள்ளையாக இருக்கும்போது இந்தப் படத்தில் புக்ஆனார். இப்போது அவர் உடல் ரெண்டு ரவுண்டு பெருத்துவிட்டதாம். அவ்வளவுகாலமாக படம் எடுத்திருக்கிறார்கள். இப்படியாக ஒளி ஒரு வழியாக முடிந்து விட்டதாம். சில சின்னக் காட்சிகளைமட்டுமே சுட வேண்டியிருக்கிறதாம் (இன்னுமா?). படம் முடிவதற்குள் நாயகி பூனம்எல்லோரின் தாவாக் கட்டையையும் தீட்டி விட்டாராம் தீட்டி.அவர் படுத்திய பாடுகளை தனியாக ஒரு படமாக எடுத்து இன்டர்வெல்லில் போட்டுதனி துட்டே பார்க்கலாமாம்.தனது வாழ்க்கை ஒளிமயமாக வேண்டும் என்றுதான் படத்திற்கு ஒளி என்று பெயர்வைத்து படத்தை ஆரம்பித்தார் தயாரிப்பாளர் அரங்கன். ஆனால் அவர் தனதுஎதிர்காலத்தை நினைத்து பயந்து போகும் அளவுக்கு ஏகப்பட்ட வெட்டிச் செலவுகளைவைத்து விட்டாராம் பூனம்.ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் அம்மணிக்கு எல்லாத்துக்குமே மினரல் வாட்டர்தான்கொடுக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் கடுப்பாகி தாம் தூம் என்று குதிப்பாராம்.ஒருமுறை மினரல் வாட்டரில் முகம் கழுவியபோது கண்ணில் தூசி விழுந்துவிட்டதாம்.உடனே, இப்பவே என்னை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிண்டு போங்கோ என்று கலாட்டாசெய்துள்ளார். சரி என்று அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைக்க, அதெல்லாம்முடியாது. அப்பல்லோதான் போக வேண்டும் என்று அடம்பிடித்து அங்கேபோயுள்ளனர்.அங்கே போனால், கண்ணில் தூசியும், கீசியும் இல்லை, சும்மா முடி விழுந்துருச்சுஎன்று கூறி சொட்டு மருந்து விட்டு அனுப்பினராம்.பூனத்தின் இந்த பூச்சாண்டி வேலையால், தயாரிப்பாளருக்கு அன்றைய படப்பிடிப்புரத்தாகி, பல ஆயிரங்கள் போச்சாம். அட, சாப்பாட்டிலேயும் படா பேஜாராம் நைனா! இரவு இவரது சாப்பாட்டுக்காக, அவர்கோரியபடி அசைவ ஐட்டங்களை ஆர்டர் செய்துள்ளனர். சொன்ன நேரத்தில் அதுவந்து விட்டது. ஆனால் முரளி கேட்டிருந்த சைவச் சாப்பாட்டு மெனுவைப் பார்த்தபூனத்திற்கு, இது நல்லாருக்கே, எனக்கு அதுதான் வேணும் என்று அடம்பிடித்திருக்கிறார்.தயாரிப்பாளர் தரப்போ, அப்ப வந்த சாப்பாட்டை என்ன செய்ய என்று கொஞ்சம்போல கோபத்துடன் கேட்க, கடுப்பாகிப் போன பூனம் எழுந்து போய் விட்டாராம்.அடுத்த நாள் தாஜா செய்துதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டி வந்தார்களாம்.இம்புட்டு அட்டகாசம் செய்யும் பூனத்தின் ஃபிளாஷ்பேக் செம ஜாலியானது.அதாகப்பட்டது, அம்மணியோட நிஜப் பேரு பூனம் இல்லை, மணி சந்தனா. அவர்புதுமுகமும் இல்லை, ரொம்பப் பழைய முகம்தான்.வண்ணத்தமிழ் பாட்டு என்ற படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக வந்து பாாேனாரே,ஞாபகமிருக்கா? அந்த ஆத்தாதான் இந்தப் பூனம். ஆனந்தம் படத்திலும் மம்முட்டியின் அத்தை மகளாக சில காட்சிகளில் மட்டும் வந்துஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டு விட்டுச் சென்றிருப்பார்.இடையில் கொஞ்சம் கேப் விட்ட மணிசந்தனா, பின்னர் பூனம் என்ற பெயரை சூட்டிக்கொண்டு ஒளி மூலம் மீண்டும் கோலிவுட்டுக்குள் வந்தார்.ஆனால் ஒளி வருவதற்குள் தயாரிப்பாளர் ஒரு வழியாகி விடுவார் போலத் தெரிகிறது!

By Staff


நீண்ண்..........ட காலமாக எடுக்கப்பட்டு வந்த ஒளி படத்தின் நாயகி பூனம் காட்டும்பூச்சாணி வேலைகளால் யூனிட்டே கடுப்பாகிக் கிடக்கிறது.

முரளி ரொம்ப காலத்துக்கு முன் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த படம் ஒளி. இது அவர்அதிமுகவில் சேர்ந்து மாபெரும் தலைவராக உயர்வதற்கு முன் இந்தப் படத்தில் புக்ஆனார் (இல்லாட்டி இந்தப் படமும் கிடைத்திருக்காது!).

இதில் முருங்கைக்காய் பாக்யராஜ் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். ஒளிச்சந்திரன் (இன்னாபேரு நைனா இது?) படத்தை ஒளிக்கிறார் .. ஸாரி ... இயக்குகிறார்.

பூனம் என்ற நடிகை சின்னப் புள்ளையாக இருக்கும்போது இந்தப் படத்தில் புக்ஆனார். இப்போது அவர் உடல் ரெண்டு ரவுண்டு பெருத்துவிட்டதாம். அவ்வளவுகாலமாக படம் எடுத்திருக்கிறார்கள்.


இப்படியாக ஒளி ஒரு வழியாக முடிந்து விட்டதாம். சில சின்னக் காட்சிகளைமட்டுமே சுட வேண்டியிருக்கிறதாம் (இன்னுமா?). படம் முடிவதற்குள் நாயகி பூனம்எல்லோரின் தாவாக் கட்டையையும் தீட்டி விட்டாராம் தீட்டி.

அவர் படுத்திய பாடுகளை தனியாக ஒரு படமாக எடுத்து இன்டர்வெல்லில் போட்டுதனி துட்டே பார்க்கலாமாம்.

தனது வாழ்க்கை ஒளிமயமாக வேண்டும் என்றுதான் படத்திற்கு ஒளி என்று பெயர்வைத்து படத்தை ஆரம்பித்தார் தயாரிப்பாளர் அரங்கன். ஆனால் அவர் தனதுஎதிர்காலத்தை நினைத்து பயந்து போகும் அளவுக்கு ஏகப்பட்ட வெட்டிச் செலவுகளைவைத்து விட்டாராம் பூனம்.

ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் அம்மணிக்கு எல்லாத்துக்குமே மினரல் வாட்டர்தான்கொடுக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் கடுப்பாகி தாம் தூம் என்று குதிப்பாராம்.ஒருமுறை மினரல் வாட்டரில் முகம் கழுவியபோது கண்ணில் தூசி விழுந்துவிட்டதாம்.

உடனே, இப்பவே என்னை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிண்டு போங்கோ என்று கலாட்டாசெய்துள்ளார். சரி என்று அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைக்க, அதெல்லாம்முடியாது. அப்பல்லோதான் போக வேண்டும் என்று அடம்பிடித்து அங்கேபோயுள்ளனர்.

அங்கே போனால், கண்ணில் தூசியும், கீசியும் இல்லை, சும்மா முடி விழுந்துருச்சுஎன்று கூறி சொட்டு மருந்து விட்டு அனுப்பினராம்.

பூனத்தின் இந்த பூச்சாண்டி வேலையால், தயாரிப்பாளருக்கு அன்றைய படப்பிடிப்புரத்தாகி, பல ஆயிரங்கள் போச்சாம்.


அட, சாப்பாட்டிலேயும் படா பேஜாராம் நைனா! இரவு இவரது சாப்பாட்டுக்காக, அவர்கோரியபடி அசைவ ஐட்டங்களை ஆர்டர் செய்துள்ளனர். சொன்ன நேரத்தில் அதுவந்து விட்டது. ஆனால் முரளி கேட்டிருந்த சைவச் சாப்பாட்டு மெனுவைப் பார்த்தபூனத்திற்கு, இது நல்லாருக்கே, எனக்கு அதுதான் வேணும் என்று அடம்பிடித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் தரப்போ, அப்ப வந்த சாப்பாட்டை என்ன செய்ய என்று கொஞ்சம்போல கோபத்துடன் கேட்க, கடுப்பாகிப் போன பூனம் எழுந்து போய் விட்டாராம்.அடுத்த நாள் தாஜா செய்துதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டி வந்தார்களாம்.

இம்புட்டு அட்டகாசம் செய்யும் பூனத்தின் ஃபிளாஷ்பேக் செம ஜாலியானது.அதாகப்பட்டது, அம்மணியோட நிஜப் பேரு பூனம் இல்லை, மணி சந்தனா. அவர்புதுமுகமும் இல்லை, ரொம்பப் பழைய முகம்தான்.

வண்ணத்தமிழ் பாட்டு என்ற படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக வந்து பாாேனாரே,ஞாபகமிருக்கா? அந்த ஆத்தாதான் இந்தப் பூனம்.


ஆனந்தம் படத்திலும் மம்முட்டியின் அத்தை மகளாக சில காட்சிகளில் மட்டும் வந்துஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டு விட்டுச் சென்றிருப்பார்.

இடையில் கொஞ்சம் கேப் விட்ட மணிசந்தனா, பின்னர் பூனம் என்ற பெயரை சூட்டிக்கொண்டு ஒளி மூலம் மீண்டும் கோலிவுட்டுக்குள் வந்தார்.

ஆனால் ஒளி வருவதற்குள் தயாரிப்பாளர் ஒரு வழியாகி விடுவார் போலத் தெரிகிறது!

Read more about: poonam and murali in oli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X