»   »  பூர்ணிதாவின் அம்மம்மா!

பூர்ணிதாவின் அம்மம்மா!

Subscribe to Oneindia Tamil

பூர்ணிதாவுக்காக அவரது அம்மா வாய்ப்பு தேடும் பாணியைப் பார்த்து கோலிவுட்டே குஷியாகிப் போய்க்கிடக்கிறது.

பேபி கல்யாணிதான் இன்று வளர்ந்து வனப்பமாக மாறியிருக்கும் பூர்ணிதா. சின்னப் பொண்ணாக இருந்தபோதேநடிக்க வந்தவர் பூர்ணிதா. ஆரம்பத்தில் டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தவர் சினிமாவிலும் அவ்வப்போதுதலை காட்டியிருக்கிறார்.

பிரபு தேவாவுடன் இணைந்து அவர் ஆடிப் பாடிய சென்னைப் பட்டணம் பாடல் மூலம் பிரபலமும் ஆனார்.சினிமாவில் அவ்வப்போது வந்து போனாலும், டிவி தொடர்களில்தான் அதிகம் நடித்து வந்தார் பூர்ணிதா.

வயதுக்கு வந்ததும் டிவி தொடர்களுக்கு முழுக்குப் போட்ட பூர்ணிதா, ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.ஹீரோயின்களுக்கே உரிய உடல் வாகு கூட வராத நிலையில் அவசரம் அவசரமாக அவர் நடிக்க வந்ததுகோலிவுட்டில் பலருக்கும் வியப்பைக் கொடுத்தது.

இருந்தாலும் பூர்ணிதாவின் அம்மாதான் படு பிடிவாதமாக தனது மகளை வெற்றிகரமாக ஹீரோயினாக்கிக்காட்டுகிறேன் எனக் கூறி இழுத்து வந்தார். வந்ததோடு நிற்காமல் அடுத்தடுத்து இரண்டு படங்களையும்மகளுக்காக பிடித்துக் கொடுத்தார்.

பூர்ணிதா நடித்த இரு படங்களில் பிரதி ஞாயிறு .. படத்தில் கிளாமராகவும் நடித்து அசத்தினார் பூர்ணிதா. நீச்சல்உடையில், மழையில் நனைந்து தனது திறமைகளை அவர் காட்டியபோது, பரவாயில்லையே என்று லேசாகஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஷோக்காகத்தான் தெரிந்தார் பூர்ணிதா.

இப்போது மேட்டர் பூர்ணிதாவின் அம்மாவைப் பற்றித்தான். மகளை பெரிய ஹீரோயினாக்கி விட வேண்டும்என்பதற்காக படு விசேஷ அக்கறை எடுத்து கடுமையாக உழைத்து வாய்ப்புகளைத் தேடிப் பிடிக்கும் முயற்சியில்குதித்துள்ளாராம் பூர்ணிதாவின் அம்மா.

தயாரிப்பாளர்களை நேரில் பார்த்தும், போனில் பேசியும் மகளின் அருமை, பெருமைகளை, திறமைகளை கூறிவாய்ப்பு தேடி வருகிறாராம் பூர்ணிதாவின் அம்மா. தனது மகளுக்காக இப்படி கடுமையாக உழைக்கும் அவரதுஅம்மாவைப் பார்த்து தயாரிப்பாளர்கள் ஆச்சரியம் காட்டுகிறார்களாம்.

பூர்ணிதாவின் அம்மாவே ஒரு டான்ஸர்தான். பரத நாட்டியம் முதல் வெஸ்டர்ன் வரை அவருக்கு எல்லாமேஅத்துப்படியாம். எனவே பூர்ணிதாவுக்கு அவரே டான்ஸ் குறித்த நெளிவு சுளிவுகள், தொழில்நுட்பங்களைவீட்டிலேயே கற்றுக் கொடுத்து விடுகிறாராம். இதனால் ஷூட்டிங்கின்போது மாஸ்டர் சொல்லும்மூவ்மென்ட்டுகளை கபால் என பிடித்துக் கொண்டு கலக்கிப்புடுகிறாராம் பூர்ணிதா.

சினிமாவோடு நின்று விடாமல், மாடலிங்கிலும் தனது மகளை அசத்த வைக்க ஆர்வமாக இருக்கிறாராம் மம்மி.பூர்ணிதாவுக்கு எதமா, பதமா எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து தேற்றி வரும் அவரது அம்மாவைப் பார்த்து பலகுட்டி நடிகைகளுக்கு பொறாமையாம்.

தாய்க்குலம்னா இப்படி இருக்கோணும்!

Read more about: mother helps poornitha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil