வசூலில் போட்டு தாக்கும் பாட்டர்
ஹாரி பாட்டர் அண்ட் தி ஆர்டர் ஆப் தி பீனிக்ஸ் படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்து புதிய சாதனை படைத்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஹாரி பாட்டர் படம் இந்தியாவில் ரிலீஸானது. உலகம் முழுவதும் இந்தப் படம் தற்போது திரையிடப்பட்டு வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.இதுவரை 333 மில்லியன் டாலர் வசூலை இப்படம் குவித்துள்ளதாம். ஹாலிவுட் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை என்கிறார்கள்.
ஹாரி பாட்டர் பட வரிசையில் இது 5வது படமாகும். 44 நாடுகளில் இந்தப் படத்திற்கு 193 மில்லியன் டாலர் வசூலாகியுள்ளதாம். திரையிட்ட அத்தனை நாடுகளிலும் இப்படம்தான் முதலிடத்தில் உள்ளது என படத்தைத் தயாரித்த வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்தப் படம் ஐந்து நாட்ளில் 139.7 மில்லியன் டாலர் வசூலை அள்ளியுள்ளது. வார இறுதி வசூல் மட்டும் 77.1 மில்லியன் டாலர்களாம்.
இந்தியாவிலும் ஹாரி பாட்டருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இப்படம் மொழி பெயர்க்கப்பட்டு ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











