Rajasaab: புஷ்பா 2 போலவே பெரிய வசூல் அள்ளணும்.. பிரபாஸ் போட்ட பக்கா பிளான்.. ராஜாசாப் ரிலீஸ் தேதி இதோ!

ஹைதராபாத்: மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ராஜாசாப்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒருவழியாக நடிகர் பிரபாஸ் தனது ரிபெல்ஸ் ரசிகர்களுக்கு இன்று அறிவித்து விட்டார். அந்த ரிலீஸ் தேதியை பார்த்த ரசிகர்கள் புஷ்பா 2 படம் போல அடுத்து டோலிவுட்டுக்கு பெரிய வசூல் வேட்டை படமாக அமையப் போகுது என்கின்றனர். இரண்டுக்கும் இடையே ஒரு செம கனெக்‌ஷனும் உள்ளது தான் ஹைலைட்.

இந்திய சினிமாவில் பாலிவுட் சினிமாவை பின்னுக்குத்தள்ளி தமிழ் சினிமா சில காலம் கோலோச்சியது. ஆனால், ராஜமெளலி, சுகுமார், சந்தீப் ரெட்டி வங்கா, நாக் அஸ்வின் என தெலுங்கு திரையுலகில் பான் இந்தியா படங்களை கொடுக்கும் இயக்குநர்கள் படையெடுத்த நிலையில், தற்போது டோலிவுட் திரையுலகம் எங்கேயோ போய் விட்டது என்று தான் சொல்ல வெண்டும்.

Prabhas s Rajasaab release date announced and it has a strong Pushpa 2 connection

பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸின் மார்க்கெட் உலகளவில் உயர்ந்துவிட்ட நிலையில், அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக காத்திருக்கும் ராஜாசாப் படத்தின் ஹாட் அப்டேட் இன்று வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

பாக்ஸ் ஆபீஸ் நாயகன் பிரபாஸ்: ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி 1 மற்றும் 2 படங்களில் நடித்து பாலிவுட்டின் கான் நடிகர்களுக்கே செம சவால் கொடுத்தவர் தான் பிரபாஸ். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் இருந்தாலும், அவர்கள் யாருமே இந்தளவுக்கு 1000 கோடி வசூலை தொடர்ந்து பல படங்களுக்கு எடுத்து சாதனை செய்யவில்லை. ஷாருக்கான், அமீர்கான் ரேஞ்சுக்கு பிரபாஸின் பாக்ஸ் ஆபீஸ் கணக்கு விண்ணை முட்டுகிறது.

புஷ்பா 2 ரிலீஸ் ஆன தேதியில் பிரபாஸ் படம்: கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இந்நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி பிரபாஸின் 'ராஜாசாப் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது சூப்பரான விஷயம் என்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து 2 மாதங்களுக்கு வசூல் வேட்டை நடத்தலாம் என்கிற திட்டத்துடன் இப்படியொரு தேதியை லாக் செய்துள்ளனர்.

ராஜசாப் டீசர் எப்போ?: இந்த மாதம் ஜூன் 15ம் தேதி ஷார்ப்பாக காலை 10:52 மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டு பிரத்யேக போஸ்டர் ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் கோடிக்கணக்கான பணங்கள் எரியத் தொடங்கிய நிலையில், அதனை சிகப்பு நிற துணியை வைத்து அணைக்க பிரபாஸ் முயற்சிப்பது போல போஸ்டர் காணப்படுகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் நிதி அகர்வால் நடித்துள்ளனர். வில்லனாக கேஜிஎஃப், லியோ படங்களில் மிரட்டிய சஞ்சய் தத் நடித்து வருகிறார். காமெடி ஹாரர் படம் என்பதால் நம்ம ஊர் யோகி பாபுவையும் படத்தில் இணைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்கி 2 படத்தில் திஷா பதானியுடன் பாடல் ஒன்றுக்கு ஆடும் லுக்கிலேயே பிரபாஸ் இருக்கிறாரே என நெட்டிசன்கள் கலாய்க்கவும் தொடங்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X