மப்புல மாளவிகா மோகனனை கடிச்சி வச்ச பிரபாஸ்.. காஞ்சனா சீரிஸ்க்கே டஃப் கொடுக்கும் போல.. ராஜாசாப் டீசர்!

சென்னை: சலார் படத்தில் எல்லாம் ரெட்ரோ படத்தில் சூர்யா வருவது போல இறுக்கமான முகத்துடனே நடித்திருப்பார் நடிகர் பிரபாஸ். பான் இந்தியா ஸ்டாராக மாறிய நிலையில், பெரிய பாக்ஸ் ஆபீஸ் படங்களுக்காக ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டுமே நடித்து வந்த அவர், செம ஜாலியான ஹாரர் காமெடி படத்தை கையில் எடுத்து நடித்திருக்கும் படம் தான் ராஜாசாப்.

நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரிதி குமார் என 3 ஹீரோயின்கள் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், டிரைலரில் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் உடன் பிரபாஸ் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

Prabhas s Rajasaab Teaser out now in Tamil
Photo Credit:

கேஜிஎஃப், லியோ படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் வில்லனாக பேய் நடிப்பைக் காட்டி மிரட்டியிருக்கிறார் சஞ்சய் தத். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் ராஜாசாப் டீசர் வெளியான நிலையில், பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பிரம்மாண்ட நாயகன் பிரபாஸ்: பாலிவுட் நடிகர்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளி இந்தியளவில் பிரம்மாண்ட நாயகனாகவே பிரபாஸ் வலம் வருகிறார். அதற்கு மிக முக்கிய காரணம் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி படங்கள் தான். அதனை தொடர்ந்து சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் மற்றும் கல்கி 2898 ஏடி என யுக புருஷனாகவே மாறிவிட்டார் பிரபாஸ். இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராஜாசாப் திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியானது.

நிதி அகர்வாலுக்கு ஜாக்பாட்: தமிழில் ஈஸ்வரன், பூமி மற்றும் கலகத் தலைவன் என நிதி அகர்வால் நடித்த 3 படங்களும் பெரிதாக ஓடவே இல்லை. ஆனாலும், பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போல, பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஹரி ஹர வீரமல்லு படத்திலும் பிரபாஸுக்கு ஜோடியாக ராஜாசாப் படத்திலும் நிதி அகர்வால் நடித்துள்ளார். செம க்யூட்டாகவும் பப்ளியாகவும் ராஜாசாப் படத்தில் நடித்துள்ளார்.

மாளவிகா மோகனனை கடிச்சி வச்சிட்டாரா?: தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் அடுத்ததாக சர்தார் 2 படத்திலும் தூள் கிளப்ப காத்திருக்கிறார். இந்நிலையில், பிரபாஸின் ராஜாசாப் படத்தில் அவர் கவர்ச்சி புயலாகவே நடித்துள்ளார். மேலாடையை சற்றே விலக்கி பிரபாஸ் கடித்து வைத்ததாக கூறும் இடத்தில், மப்புல ஏதோ கொஞ்சம் கடிச்சி வச்சிருப்பேன் என பிரபாஸ் பேசும் வசனம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காஞ்சனா சீரிஸ்க்கே டஃப்: தமிழில் காஞ்சனா வரிசை படங்கள், சுந்தர் சியின் அரண்மனை சீரிஸ் படங்கள் மற்றும் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு வரிசை படங்கள் எல்லாம் ஹாரர் காமெடி ஜானரில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில், இந்தியிலும் புல் புலாயா சீரிஸ் படங்கள், மூன்ஜியா, ஸ்ட்ரீ சீரிஸ் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்த நிலையில், ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தையும் தியேட்டருக்கு வரவைக்கும் படமாக பிரபாஸின் ராஜாசாப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அதிக வசூலை ஈட்டும் படமாக இந்தியளவில் இந்த படம் இருக்கும் என்கின்றனர். கோபுரம் சினிமாஸ் ராஜாசாப் படத்தின் தமிழ் வெர்ஷனை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X