twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அசல்' விவகாரம்: அன்புமணிக்கு நடிகர் பிரபு பதில்

    By Staff
    |

    Prabhu ,Ramkumar and Ajith
    சென்னை: அசல் திரைப்படத்தில் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு தான் நடந்து கொண்டிருக்கிறோம். தணிக்கைக் குழுவும் படத்தை திரையிடலாம் என சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே படத்துக்கு எந்த குந்தகமும் விளையாமல் பார்த்துக் கொள்ளுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் அண்புமணிக்கு நடிகர் பிரபு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

    இந்தப் படத்தைத் தயாரித்துள்ள பிரபு தனது கடிதத்தில்,

    'அசல்' படத்தில் இடம்பெறும் புகை பிடிப்பது போன்ற காட்சி தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் எங்கள் பார்வைக்கு வந்தது.

    எங்கள் தந்தை சிவாஜி கணேசன் பெயரை தாங்கியுள்ள நிறுவனம் 50 ஆண்டு பாரம்பரியத்தை கொண்டது. எங்கள் தயாரிப்பான அசல் திரைப்படம் தணிக்கைக் குழுவினரால் உன்னிப்பாக பார்க்கப்பட்டு, திரையிட தகுதியானது என சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்தத் திரைப்படம் தணிக்கைக்கு போவதற்கு முன்பே அதன் டிரைலரிலும், திரைப்படத்திலும் புகைப்பிடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது என்ற அறிவிப்பை துவக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம்.

    படத்தின் நாயகன் அஜீத்குமார் புகைப்பிடிப்பதனால் வரும் தீங்கை இந்த படத்தின் துவக்கத்திலேயே செய்தியாக அறிவித்திருக்கிறார்.
    தணிக்கைக் குழு என்னவெல்லாம் செய்ய சொன்னதோ அவை அனைத்தையும் நிறைவு செய்திருக்கிறோம்.

    எங்கள் தந்தையின் வழியில் எப்போதுமே இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்து வருகிறோம்.

    தமிழ் திரைப்படத் துறையின் நெருக்கடியை நன்கு உணர்ந்த தாங்கள் ஒரு இயக்கத்திற்கு பொறுப்பான தலைவராக இருப்பதால், எந்தத் திரைப்படத்திற்கும் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    இயக்குனர் சரண், நாயகன் அஜீத் சார்பில் இந்த பதிலை எழுதியிருக்கிறேன் என்று பிரபு கூறியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X