நாங்கலாம் அப்பவே அப்புடி.. இருட்டு அறைக்கே பயந்துட்டா.. இந்த படத்தை என்ன சொல்லுவீங்க!
சென்னை: தமிழில் த்ரில்லர், ஆக்சன், க்ரைம் போன்ற ஜானரில் படங்கள் வந்து வெற்றி கண்டுள்ளன. 18+ அடல்ட் காமெடி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக டீன் ஏஜ் இளம்பருவத்தினரை கவரும் படங்கள் அதிகம் வராவிட்டாலும், மழைக்கு ஒதுங்குவது போல் ஒரு சில படங்கள் வந்து தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தையும் ஈட்டி தருகிறது. தற்போது வெளியாகும் படங்களை காட்டிலும் அப்போதே படம் முழுக்க டபுள் மீனிங் வசனம் தான். அப்படம் 100 நாள் வெற்றிவிழாவும் கொண்டாடியுள்ளது. அதுகுறித்த இதை காணலாம்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா, 90எம்எல், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹரஹரமஹாதேவகி போன்ற படங்களை பார்த்து விமர்சிக்காத நபர்களே இல்லை. திரை விமர்சகர்களும் இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமா அழிவுக்கு தான் போகும், அழிவை நோக்கி போய்கிறது என கடுமையாக விமர்சித்தனர். வசூலில் சக்கை போடு போட்டன. இளைஞர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்போத இப்படி என்றால் அந்த காலத்திலும் அடல்ட் கண்டன்ட் படங்கள் வெளிவந்துள்ளது.

ஆனால், அந்த படங்களில் பயர் மாதிரியான வசனங்களும் படத்தின் கதை, திரைக்கதையும் அடல்ட் கண்டன்ட்டாகவே இருந்தது. காட்சிகளில் ஆபாசம் இல்லை என்பது மட்டுமே நிறைவானது. இந்த படங்கள் வந்தபோது சினிமா ரசிகர்களை தாண்டி விமர்சகர்களிடம் இருந்து வெறுப்பை சம்பாத்திருக்கிறது.
முத்து எங்கள் சொத்து: 1983ம் ஆண்டு ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய முத்து எங்கள் சொத்து படத்தில் பிரபு, ராதா, ராஜீவ், வேணு அரவிந்த், கீதா, கே.ஏ. தங்கவேலு, மனோரமா, அனுராதா, வனிதா, பூர்ணம் விஸ்வநாதன், எஸ்.என்.பார்வதி, தேங்காய் ஸ்ரீனிவாசன், சிவச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதையே சொத்திற்காக நடக்கும் அக்கப்போர் தான். கதைப்படி பூர்ணம் விசுநாதனுக்கு ராஜீவும், வேணு அரவிந்தும் மகன்கள். இருவருமே ஜாலி பேர்வழிகள். அப்பாவின் சொத்துக்களை சுரண்டி, நடன அழகி அனுராதாவிடம் கொடுத்து அவர் அழகில் மயங்கி கிடப்பவர்கள்.

குழந்தை இருந்தால் சொத்து: இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் பூர்ணம் விஸ்வநான். இருவரில் யாருக்கு முதலில் குழந்தை பிறக்கிறதோ அந்த குழந்தைக்கே எனது சொத்துக்கள் சொந்தம் என்கிறார். இதனால் இருவரின் மனைவிகளும் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள போட்டி போட்டு கணவன்மார்களை கட்டில் டார்ச்சர் செய்வதுதான் திரைக்கதை. இந்த பிரச்னையை அந்த வீட்டில் வேலைக்காரனாக இருக்கும் முத்துவும்(பிரபு) அவரை காதலிக்கும் சமையல்காரி ராதாவும் எப்படி தீர்த்து வைக்கிறார்கள் என்பது கதை.
இசைஞானி இளையராஜாவை அறிமுகம் செய்த வைத்த லெஜண்ட்ரி பஞ்சு அருணாசலம் நேரடியாகவே ஆபாச வசனங்களை எழுதி திரை ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்டார். நல்ல படங்களை இயக்கி பெயரெடுத்த ரங்கராஜன் இந்த படத்தையும் எடுத்து கெட்டப்பெயர்தான் கிடைத்தது. வேண்டாத கோயில் இல்லை போகாத மருத்துவர் இல்லை என குழந்தை வரத்திற்காக ஏங்கி தவித்த சினிமா கதைகளை கொஞ்சம் ஓரம் கட்டி இயக்குநர் ரங்கராஜனும், பஞ்சு அருணாசலமும் இறங்கி அடித்து வசனத்தில் ரகளை செய்திருப்பார்கள். ஆனால், அப்போதிருந்த கலாச்சார மரபு அவர்களை திட்டி தீர்க்க வைத்து விட்டன. எப்படி இருந்தாலும் படம் 100 நாளை தாண்டி ஓடி விழாவும் கொண்டாடியது.

காலம் மாற மாற திரை ரசிகர்களின் ரசனையும் மாறி விட்டது. ஆங்கில மொழிகளில் இதுபோன்ற படங்கள் வெப் தொடர்களாகவே வந்து கலக்கி கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ் திரையுலகில் ஆபாசம் தான் அடல்ட் என்று நம்புகின்றனர். வசனத்தை கொஞ்சம் தூக்கலாக வைத்து ஆபாசத்தை குறைத்தால் அதுவும் அடல்ட்தான் அப்போதே நிரூபித்து வெற்றி கண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











