பிரகாஷ்ராஜ் - போனி வர்மா திருமணம்... மும்பையில் இன்று நடந்தது!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் பிரகாஷ் ராஜ். காஞ்சீவரம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர்.
பிரகாஷ்ராஜூம் அவரது முதல் மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்தனர். பின்னர் இந்திப்பட டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றனர். போனியைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார் பிரகாஷ் ராஜ்.
இந்த நிலையில் பிரகாஷ் ராஜூக்கும் போனிவர்மாவுக்கும் மும்பையில் இன்று காலை 10.30 மணிக்கு திடீர் திருமணம் நடந்தது. அங்குள்ள மலாடு விளையாட்டு மைதான அரங்கில் திருமணம் நடந்தன.
வேத மந்திரங்கள் ஓத இந்து முறைப்படி போனி வர்மாவுக்கு பிரகாஷ்ராஜ் தாலி கட்டினார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய திரையுலக பிரமுகர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து பிரகாஷ் ராஜுக்கு நெருக்கமான இயக்குனர்கள் ராதாமோகன், குகன், விஜி, குமரவேலு மற்றும் கப்பார், வெங்கட் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.


Click it and Unblock the Notifications











