பிரகாஷ் ராஜ்- இளையராஜா கூட்டணியில் 'தோணி' ரெடி!

நடப்பு கல்வி முறை பற்றிய பார்வை, குழந்தைகள் - பெற்றோர் உறவு குறித்த படமாக இந்த தோணி வரவுள்ளது.
இந்தப் படத்தின் கதையை முழுவதுமாகக் கேட்டபிறகே இசையமைக்க ஒப்புக்கொண்டாராம் இளையராஜா. அதுமட்டுமல்ல, இந்தப் படத்துக்காக மீண்டும் பழைய ஸ்டைலில் அனைத்து இசைக்கலைஞர்களையும் ஸ்டுடியோவுக்கு வரவழைத்து நேரடியாக இசைக்க வைத்துள்ளார் ராஜா.
பாடல்களும் பின்னணி இசையும் இந்தப் படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும் என்று பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
பிரகாஷ்ராஜ் முதல்முறையாக தமிழில் இயக்கும் படம் இது. ஹீரோவும் அவரே. ராதிகா ஜோடியாக நடித்துள்ளார். தலைவாசல் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரகாஷ்ராஜின் நெருங்கிய நண்பரான பிரபு தேவா இந்தப் படத்தில் நட்புக்காக தோன்றுகிறார்.
Comments


Click it and Unblock the Notifications