»   »  இயக்குனராகும் பிரகாஷ்ராஜ்! நடிப்பு, தயாரிப்பில் அசத்தி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் அடுத்து இயக்குனர் அவதாரம்பூணுகிறார்.கன்னட நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமா மீதும், தமிழ் சினிமாக்காரர்கள் மீதும்ரொம்ப பெரிய மயாதை வைத்திருப்பவர் பிரகாஷ் ராஜ்.தமிழ் சினிமாவில்தான் பரீட்சார்த்தம் மிகவும் தைரியமாக செய்யப்படுகிறது, நல்லடெக்னீஷியன்கள் இங்குதான் உள்ளனர் என்று பெங்களூரிலும் கூட தைரியமாகபேட்டி கொடுக்கக் கூடியவர் பிரகாஷ்ராஜ்.நடிகராக அமர்க்களப்படுத்தி வந்த பிரகாஷ் ராஜ் அப்படியே தயாரிப்புக்கும் தாவினார்.தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில், ஏகமான சம்பளத்துக்கு நடிக்கும் பிரகாஷ் ராஜ்தனது பணத்தை அப்படியே தமிழ் சினிமாவில் தான் முடக்கி வருகிறார்.குப்பைப் படங்களாக எடுத்து கும்மி அடிக்காமல், நல்ல கதைகளுடன் கூடியபடங்களை மட்டுமே கொடுத்து அருமையான படைப்புகளைத் தயாரித்து வருகிறார்பிரகாஷ் ராஜ். நல்ல தயாரிப்பாளராகவும் பெயர் வாங்கியுள்ள பிரகாஷ் ராஜ் நல்லடைரக்டர்களை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.தனது குரு கே.பாலச்சந்தரின் 101வது படைப்பான பொய் படத்தையும் தானேதயாரித்து வருகிறார்.இப்போது இயக்குனராக அவதாரம் எடுக்கிறார் பிரகாஷ் ராஜ். மலையாளத்தில்வெளியாகி வெற்றி பெற்ற உதயன்னும் தாரம் படத்தை தான் தமிழில் இயக்கவுள்ளார்.மோகன்லால், சீனிவாசன், மீனா ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற இந்தப் படத்தில்மோகன் லால் வேடத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். சீனிவாசன் ரோலை செய்யவுள்ளார்பிரகாஷ் ராஜ்.மீனா கேரக்டரில் கோபிகா அல்லது ஸ்னேகா நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை விஜி பார்த்துக்கொள்கிறார்.இயக்கத்திற்காக பிரகாஷ் ராஜ் அதிக சிரமப்படக் கூடிய வாய்ப்பு இல்லை.ஏனென்றால் 10 கன்னடப் படங்களில் அவர் உதவி இயக்குனராக இருந்துள்ளார். சிலபடங்களில் எடிட்டிங் கூட செய்துள்ளார்.செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தை ஆரம்பித்து புத்தாண்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.

இயக்குனராகும் பிரகாஷ்ராஜ்! நடிப்பு, தயாரிப்பில் அசத்தி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் அடுத்து இயக்குனர் அவதாரம்பூணுகிறார்.கன்னட நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமா மீதும், தமிழ் சினிமாக்காரர்கள் மீதும்ரொம்ப பெரிய மயாதை வைத்திருப்பவர் பிரகாஷ் ராஜ்.தமிழ் சினிமாவில்தான் பரீட்சார்த்தம் மிகவும் தைரியமாக செய்யப்படுகிறது, நல்லடெக்னீஷியன்கள் இங்குதான் உள்ளனர் என்று பெங்களூரிலும் கூட தைரியமாகபேட்டி கொடுக்கக் கூடியவர் பிரகாஷ்ராஜ்.நடிகராக அமர்க்களப்படுத்தி வந்த பிரகாஷ் ராஜ் அப்படியே தயாரிப்புக்கும் தாவினார்.தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில், ஏகமான சம்பளத்துக்கு நடிக்கும் பிரகாஷ் ராஜ்தனது பணத்தை அப்படியே தமிழ் சினிமாவில் தான் முடக்கி வருகிறார்.குப்பைப் படங்களாக எடுத்து கும்மி அடிக்காமல், நல்ல கதைகளுடன் கூடியபடங்களை மட்டுமே கொடுத்து அருமையான படைப்புகளைத் தயாரித்து வருகிறார்பிரகாஷ் ராஜ். நல்ல தயாரிப்பாளராகவும் பெயர் வாங்கியுள்ள பிரகாஷ் ராஜ் நல்லடைரக்டர்களை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.தனது குரு கே.பாலச்சந்தரின் 101வது படைப்பான பொய் படத்தையும் தானேதயாரித்து வருகிறார்.இப்போது இயக்குனராக அவதாரம் எடுக்கிறார் பிரகாஷ் ராஜ். மலையாளத்தில்வெளியாகி வெற்றி பெற்ற உதயன்னும் தாரம் படத்தை தான் தமிழில் இயக்கவுள்ளார்.மோகன்லால், சீனிவாசன், மீனா ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற இந்தப் படத்தில்மோகன் லால் வேடத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். சீனிவாசன் ரோலை செய்யவுள்ளார்பிரகாஷ் ராஜ்.மீனா கேரக்டரில் கோபிகா அல்லது ஸ்னேகா நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை விஜி பார்த்துக்கொள்கிறார்.இயக்கத்திற்காக பிரகாஷ் ராஜ் அதிக சிரமப்படக் கூடிய வாய்ப்பு இல்லை.ஏனென்றால் 10 கன்னடப் படங்களில் அவர் உதவி இயக்குனராக இருந்துள்ளார். சிலபடங்களில் எடிட்டிங் கூட செய்துள்ளார்.செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தை ஆரம்பித்து புத்தாண்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.

Subscribe to Oneindia Tamil

நடிப்பு, தயாரிப்பில் அசத்தி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் அடுத்து இயக்குனர் அவதாரம்பூணுகிறார்.

கன்னட நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமா மீதும், தமிழ் சினிமாக்காரர்கள் மீதும்ரொம்ப பெரிய மயாதை வைத்திருப்பவர் பிரகாஷ் ராஜ்.

தமிழ் சினிமாவில்தான் பரீட்சார்த்தம் மிகவும் தைரியமாக செய்யப்படுகிறது, நல்லடெக்னீஷியன்கள் இங்குதான் உள்ளனர் என்று பெங்களூரிலும் கூட தைரியமாகபேட்டி கொடுக்கக் கூடியவர் பிரகாஷ்ராஜ்.

நடிகராக அமர்க்களப்படுத்தி வந்த பிரகாஷ் ராஜ் அப்படியே தயாரிப்புக்கும் தாவினார்.தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில், ஏகமான சம்பளத்துக்கு நடிக்கும் பிரகாஷ் ராஜ்தனது பணத்தை அப்படியே தமிழ் சினிமாவில் தான் முடக்கி வருகிறார்.

குப்பைப் படங்களாக எடுத்து கும்மி அடிக்காமல், நல்ல கதைகளுடன் கூடியபடங்களை மட்டுமே கொடுத்து அருமையான படைப்புகளைத் தயாரித்து வருகிறார்பிரகாஷ் ராஜ். நல்ல தயாரிப்பாளராகவும் பெயர் வாங்கியுள்ள பிரகாஷ் ராஜ் நல்லடைரக்டர்களை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

தனது குரு கே.பாலச்சந்தரின் 101வது படைப்பான பொய் படத்தையும் தானேதயாரித்து வருகிறார்.

இப்போது இயக்குனராக அவதாரம் எடுக்கிறார் பிரகாஷ் ராஜ். மலையாளத்தில்வெளியாகி வெற்றி பெற்ற உதயன்னும் தாரம் படத்தை தான் தமிழில் இயக்கவுள்ளார்.

மோகன்லால், சீனிவாசன், மீனா ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற இந்தப் படத்தில்மோகன் லால் வேடத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். சீனிவாசன் ரோலை செய்யவுள்ளார்பிரகாஷ் ராஜ்.

மீனா கேரக்டரில் கோபிகா அல்லது ஸ்னேகா நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை விஜி பார்த்துக்கொள்கிறார்.

இயக்கத்திற்காக பிரகாஷ் ராஜ் அதிக சிரமப்படக் கூடிய வாய்ப்பு இல்லை.ஏனென்றால் 10 கன்னடப் படங்களில் அவர் உதவி இயக்குனராக இருந்துள்ளார். சிலபடங்களில் எடிட்டிங் கூட செய்துள்ளார்.

செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தை ஆரம்பித்து புத்தாண்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil