»   »  மாமா பிரசாத்தின் மஜா ஆல்பம்

மாமா பிரசாத்தின் மஜா ஆல்பம்

Subscribe to Oneindia Tamil

விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத்தின் நீலாங்கரை பங்களாவில் அழகிகளுடன் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் இருக்கும் ஆபாச ஆல்பம் ஒன்றைபோலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

பிரசாத் விவகாரத்தில் தினசரி ஒரு புதுத் தகவல் கிடைத்து வருகிறது. பிரசாத்துடன் தொடர்புடைய பல நடிகைகள் குறித்த தகவல்களை அவர்போலீஸில் சொல்லியுள்ளதால் நடிகைகள் பலர் பீதியில் உள்ளனர்.

இந் நிலையில் பிரசாத், விபச்சார அழகிகள் ஆகியோருடன் பல பெருந்தலைகள் இடம் பெற்றுள்ள ஒரு புகைப்பட ஆல்பம் போலீஸ் கையில்சிக்கியுள்ளது.

பிரசாத் வாடகைக்கு எடுத்து வைத்துள்ள நீலாங்கரை பங்களாவில், போலீஸார் சோதனை நடத்தினர். அபபோது அங்கு ஒரு ஆல்பம் கிடைத்தது.அதில், ஏராளமான புகைப்படங்கள் இருந்தன. அத்தனையிலும் விபச்சார அழகிகளுடன் பிரசாத், முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர்.புகைப்படங்களில் உள்ள பிரபலங்கள் பெரும்பாலானோருக்கு வயது 50க்கு மேல் ஆகும். அத்தனை பேரும் இளம் பெண்களுடன் படு குஜாானபோஸ்களில் உள்ளனர். புகைப்படத்தில் உள்ள பெண்கள் ஆபாச உடையில், ஆபாச கோலத்தில் காணப்படுகின்றனர்.

இன்று ஒரு நாள் பிரசாத்தை காவலில் வைதது விசாரிக்க நேற்று சென்னை நீதிமன்றத்தில் அனுமதி வாங்கிய போலீஸார், இந்த ஆல்பத்தைக் காட்டிநேற்று இரவு முழுவதும் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

புகைப்படங்களில் இருப்பவர்களைக் காட்டி அவர்கள் யார் என்பதை போலீஸார் கேட்டறிந்தனர். அதில் பல நடிகைகள், துணை நடிகைகளும்உள்ளனர். அவர்கள் குறித்த விவரங்களையும் போலீஸார் சேகரித்துள்ளனர்.

இதுதவிர பிரசாத்தின் தொழில் குறித்தும், அவரது மனைவிகள் குறித்தும் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

நீலாங்கரை பங்களாவுக்கு யார் யார் வருவார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களையும் போலீஸார் கேட்டறிந்தனர்.

பிரசாத்தின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகைகள், துணை நடிகைகள், ரெகுலர் கஸ்டமர்கள் உள்ளிட்டோர் குறித்தும் பாலீஸார் கேட்டறிந்தனர்.இதுதவிர தனது தொழிலை சிறப்பாக நடத்த போலீஸாருக்கு பிரசாத் கொடுத்த பணம் குறித்தும் போலீஸார் தகவல்களை சேகரித்துள்ளனர்.

எந்தெந்த முக்கியப் பிரமுகர்களுக்கு பிரசாத் பெண்களை சப்ளை செய்தார் என்பதும் நேற்றைய விசாரணையில் பிரசாத்திடம் கேட்கப்பட்டது.

போலீஸாரின் கேள்விகளுக்கு பிரசாத் சளைக்காமல் பதிலளித்தாராம். இருந்தாலும்

கடைசிக் கட்டத்தில் சோர்வாகிப் போனாராம்.

நீலாங்கரை பங்களா தவிர மதுரவாயலில் உள்ள ஒரு பங்களாவிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.

நேற்றைய விசாரணையில் பிரசாத் பல முக்கியத் தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுவதால் ஏற்கனவே பீதியில் உறைந்துகிடக்கும் முன்னணி நடிகைகள், முக்கியப் பிரமுகர்கள் தற்போது மேலும் கலக்கமடைந்துள்ளனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil