»   »  பிரசாத்தின் கணக்குப் பிள்ளை!

பிரசாத்தின் கணக்குப் பிள்ளை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னட பிரசாத்தின் 3வது மனைவி குசும், பிரசாத்தின் தொழிலுக்கு தான் எவ்வாறெல்லாம் உதவியாக இருந்தேன் என்பதை போலீஸாரிடம் புட்டுப்புட்டு வைத்துள்ளார். பிரசாத்தின் லிஸ்ட்டில் இருந்த விபச்சார அழகிகளுக்கு வங்கியில் அக்கவுண்ட் ஆரம்பித்துத் தருவது, பணம் போடுவதுஉள்ளிட்ட பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்து வந்துள்ளாராம் குசும்.

மாபெரும் மாமா பிரசாத் கைதானதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பு வைத்திருந்த பெரும்பாலான முக்கிய நடிகைகள் சென்னையை விட்டுஎஸ்கேப் ஆகியுள்ளனர். பலர் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பறந்து விட்டனர். சிலர் தங்களது சொந்த மாநிலங்களுக்குப் போய் பதுங்கிவிட்டனராம்.

ஒரு நாள் காவலில் பிரசாத்தை எடுத்து போலீஸார் விசாரித்தபோது அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை. நீலாங்கரை மற்றும் மதுரவாயலில் உள்ளபிரசாத்தின் இருப்பிடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஆல்பம் உள்ளிட்டவை சிக்கின. மேலும், பீரோவில் இருந்த லாக்கரில் 21 வங்கிபாஸ் புத்தகங்கள் சிக்கின. கிரெடிட் கார்டுகளும் இருந்தன.

அந்த வங்கி பாஸ் புத்தகங்களில் பல பெண்களின் பெயர்கள் இருந்தன. இந்த வங்கிக் கணக்கில் குசும்தான் பணத்தை செலுத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குசுமிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, விபச்சார அழகிகளுக்கு>ய பணத்தை குசும்தான் வங்கிக் கணக்குகளில்செலுத்துவதும், பணப் பட்டுவாடா உள்ளிட்ட பணிகளை குசும்தான் நிர்வகித்து வந்ததும் தெரிய வந்தது.

குசுமிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் தெரிவித்த தகவல்கள்:

நான் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவள். பட்ட மேற்படிப்பு படித்துள்ளேன். என் மீது ஆசைப்பட்ட பொறியாளர் ராஜேஷ் என்னைக் காதலித்தார்.இறுவரும் திருமணம் செய்து கொண்டோம்.

கொல்கத்தாவில் உள்ள ஹோட்டல்களில் நான் நடனம் ஆடி பணம் சம்பாதித்தேன். எனது குடும்பம் கஷ்டப்பட்ட நிலையில் இருந்ததால்அப்பணத்தை நான் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தேன். இதை ராஜேஷ் எதிர்த்தார்.

என்னை எரிச்சல்படுத்துவதற்காக என் கண் முன்னாலேயே பல பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் உல்லாசமாக இருப்பார். ஒருகட்டத்தில் அவரது நண்பர்களிடமும் என்னை உல்லாசமாக இருக்கக் கூறினார். இதனால் நான் விபச்சாரப் பெண்ணாக மாறும் நிலை ஏற்பட்டது.

பின்னர் அவரைப் பிரிந்து வந்தேன். எனது தந்தை மூலம் நட்சத்திர ஹோட்டல்களில் தொடர்ந்து நடனம் ஆடி வந்தேன். மும்பை, பெங்களூர் எனபல ஊர்களுக்கு காண்டிராக்ட் முறையில் போய் ஆடினேன்.

இப்படித்தான் 2 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரியில் ஒரு ஹோட்டலில் ஆடிக் கொண்டிருந்தேன். 3 மாத காண்டிராக்டில் என்னைவரவழைத்திருந்தனர். எனது தந்தையும் என்னுடன் வந்திருந்தார். அங்கு நல்ல பணம் கிடைத்தது.

அப்போது அங்கு வந்த பிரசாத் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினார். பின்னர் எனது தந்தையிடம் பேசி மாதம் ரூ. 1 லட்சம் பணம்தருவதாக கூறினார். தந்தை சம்மதிக்கவே, ஹோட்டல் நிர்வாகத்திடம் பேசி காண்டிராக்டை முடிவுக்குக் கொண்டு அவர்களுக்குப் பணம் கொடுத்துவிட்டு என்னை அழைத்துச் சென்றார்.

மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்டோம். என் மீது பிரியமாக இருந்தார். விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்றாலும் கூட வேறுயாருடனும் அவர் உறவு வைத்துக் கொள்ள மாட்டார். இது என்னை மிகவும் கவர்ந்தது. கடந்த டிசம்பரில் எனது பிறந்த நாளை மிகப் பெரியவிழாவாகக் கொண்டாடினார்.

அவருடைய தொழிலில் இருந்த பெண்கள் அனைவரும் என்னிடம் மிகப் பிரியமாக இருப்பார்கள். நானும் அவர்களை அடிக்கடி அழைத்துவிருந்து கொடுப்பேன். என்னால் முடிந்த உதவிகளை பிரசாத்துக்கு செய்து வந்தேன்.

அவரிடம் தொழில்ரீதியாக தொடர்பு வைத்திருந்த நடிகைகள், அழகிகளுக்கு நான்தான் வங்கிக் கணக்ககளை தொடங்கிக் கொடுத்தேன்.நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகளை நான் தொடங்கிக் கொடுத்துள்ளேன். அவர்களுக்குரிய பணத்தை நானே வங்கியில் போட்டு விடுவேன்.

பெரிய நடிகைகள் பார்ட்டிகளிடம் போவதற்கு முன்பே ரூ. 50,000 ஆயிரம் பணம் வரை வங்கியில் போட்டு விடுவோம். போய் விட்டுத்திரும்பியதும் மீதப் பணத்தைப் போடுவோம்.

பணத்தைக் கொடுப்பதில் நாங்கள் பிராம்ப்ட் ஆக இருந்ததால் நடிகைகளும், அழகிகளும் எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள்.எப்போது கூப்பிட்டாலும் வந்து போவார்கள் என்று கூறியுள்ளார் குசும்.

போலீசிடம் அழுத ராஜேஷ்:

இதற்கிடையே கன்னட பிரசாதுடன் குசுமும் மாட்டிக் கொண்டதை அறிந்த அவரது முதல் கணவர் ராஜேஷ் போலீசாரிடம் வந்து, தனதுமனைவியை பிரசாத் தட்டிப் பறித்துவிட்டதாக புகார் கூறி அழுதார்.

குசுமுக்காக நான் பெற்றோரை பிரிந்து வந்தேன். அவரோ பிரசாதுடன் ஓடிப் போய்விட்டார். என் மனைவியை பிரசாத் தட்டிப் பறித்துவிட்டான்என்றார்.

இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் பிரசாத் கைது:

இதற்கிடையே, இன்ஸ்பெக்டர் முருகன் என்பவரை பீர் பாட்டிலால் தாக்கியதாக போலீஸார் போட்டுள்ள புதிய வழக்கில் பிரசாத்தை இன்றுபோலீஸார் புழல் சிறைக்குச் சென்று அதுதொடர்பான உத்தரவைக் காட்டி கைது செய்தனர்.

இந்த வழக்கில் இன்று பிற்பகலுக்கு மேல் நீதிமன்றத்தில் பிரசாத்தை போலீஸார் ஆஜர்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். மீண்டும் பிரசாத்தை 10நாட்களுக்கு காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

குண்டர் சட்டத்திலும்...

இதேபோல குண்டர் சட்டத்தின் கீழும் பிரசாத்தைக் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, விபச்சாரம் தவிர பண மோசடி உள்ளிட்டவற்றிலும் பிரசாத் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பல தொழிலதிபர்களைஅழகிகளுடன் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்களைக் காட்டி அவர்களிடம் பெருமளவு பணத்தை கறந்துள்ளாராம் பிரசாத்.

அதே போல மோசடிகள், விபச்சாரத்துக்கு துணையாக இருந்த காரணத்தால் குசுமும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil