»   »  குசும் சிறையில் அடைப்பு!

குசும் சிறையில் அடைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னட பிரசாத்தின் 3வது மனைவி குசும் அரசு பாதுகாப்பு இல்லத்திலிருந்து சென்னை மத்திய சிறைக்குமாற்றப்பட்டு இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்டார்.

மாபெரும் மாமா கன்னட பிரசாத் சமீபத்தில் சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்துபிடிபட்டார். அவருடன் 3வது மனைவி குசும், மும்பையைச் சேர்ந்த ஷீலா, பிரியா ஆகிய இருஇளம்பெண்களும் சிக்கினர்.

இவர்களில் பிரசாத் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற 3 பேரும் அரசினர் பாதுகாப்புஇல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதில், பிரியாவும், ஷீலாவும் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அது நிராகரிக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இந்த மனு இன்று நீதிபதி ரகுபதி முன்னிலையில்விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் இருவருக்கும் ஜாமீன் வழங்க ஆட்சேபனைதெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி இருவரும் மேஜரானவர்கள். எனவே அறியாமல் செய்து விட்டதாக மனுதாரர்களின்வழக்கறிஞர்கள் கூறுவதை ஏற்க முடியாது. மேலும் இவர்களை விடுவித்தால் அது விசாரணைக்கு பாதிப்பைஏற்படுத்தும் என்று போலீஸ் தரப்பில் கூறுவதை புறக்கணிக்க முடியாது. எனவே இப்போதைக்கு ஜாமீன்வழங்க முடியாது என்று கூறி நிராகரித்தார். பின்னர் விசாரணை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந் நிலையில் பிரசாத்தின் 3வது மனைவி குசுமிடம் தேவையான அளவுக்கு விசாரித்து முடித்து விட்டபோலீஸார் அவரிடமிருந்து பல முக்கியத் தகவல்களைப் பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, இரவோடு இரவாக புழல் மத்தியசிறைக்கு மாற்றி விட்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil