»   »  பிரசாத்-விபச்சாரத்தில் சிறுமி!

பிரசாத்-விபச்சாரத்தில் சிறுமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னட பிரசாத்தால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 16 வயது சிறுமி சிம்ரனுக்கு இன்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

மாபெரும் மாமாவான விபச்சாரப் புரோக்கர் கன்னட பிரசாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது 3வது மனைவியாககூறப்படும் குசுமும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில், பிரசாத்தால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 16 வயது சிறுமி சிம்ரனுக்கு இன்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் இன்று மருத்துவப் ப>சோதனை நடத்தப்படுகிறது. அதன் பின்னர் இந்த வழக்கிலும், பிரசாத்தைபோலீஸார் கைது செய்யவுள்ளனர்.

இதற்கிடையே, குசும் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அவரது சார்பாக வக்கீல் சிவா மனு தாக்கல்செய்துள்ளார். தனது மனுவில், நான் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவள். 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு தமிழ் தெரியாது.

ராஜேஷ்தான் எனது கணவர். மும்பையில் திருமணம் செய்து கொண்ட நாங்கள், 3 மாதங்களுக்கு முன்பு சைதாப்பேட்டை பதிவாளர்அலுவலகத்தில் பதிவுத் திருமணமும் செய்து கொண்டோம்.

சென்னை சின்மயா நகர் 3வது தெருவில் கணவருடன் வசித்து வருகிறேன். நான் மாடலிங் தொழில் செய்து வருகிறேன். எனக்கும் கன்னடபிரசாத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் அவருடைய மனைவியும் இல்லை.

என் மீது சுஜீதா என்பவர் புகார் கொடுத்துள்ளார். அவரையும் மற்ற பெண்களையும், நானும், பிரசாத்தும் சேர்ந்து நீலாங்கரை பங்களாவில்அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சுஜீதா புகாரில் கூறியுள்ளார். ஆனால் அதில் உண்மை இல்லை.

எனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு கிடையாது. தவறாக என்னை இவ்வழக்கில் சேர்த்துள்ளனர். என்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் குசும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil