»   »  பிரசாத் மாமா மீது மேலும் 3 கேஸ்!

பிரசாத் மாமா மீது மேலும் 3 கேஸ்!

Subscribe to Oneindia Tamil

விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத் மீது மேலும் 3 வழக்குகளை போலீஸார் போட்டுள்ளனர்.

விபச்சாரத்தை மிகப் பெரிய தொழிலாக, ஹைடெக் கட்டமைப்புடன் கலக்கலாக செய்து வந்த கன்னட பிரசாத் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

பிரசாத் மீது தற்போது 11 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரது 3வது மனைவி குசுமும் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.

மைனர் பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது, இன்ஸ்பெக்டரை பீர் பாட்டிலால் குத்திக் கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் கைதுசெய்யப்பட்டுள்ளார் பிரசாத். இதுதவிர அவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2004ம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை, பிரசாத்தின் கூட்டாளியான கங்காதரன் என்பவர் சினிமாவில் சேர்த்துவிடுவதாக கூறி சென்னைக்குக் கூட்டி வந்தார்.

வந்த இடத்தில், முதலில் ஒத்திகை பார்ப்போமா என்று கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பலரிடமும் அனுப்பி வைத்து பவித்ராவின் பவித்ரத்தை காலிசெய்தார். சீரழிந்து போன பவித்ராவை இதுக்கு மேல ஊருக்குப் போய் என்ன செய்யப் போறே என்று கேட்டு அடையாறில் ஒரு பங்களாவில்அடைத்து வைத்த விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார். கங்காதரனின் மனைவி விமலாவும் கூட மாட இருந்து பவித்ராவை பலருக்ககும் அனுப்பி வைக்கஉதவியுள்ளார்.

போலீஸார் நடத்திய அதிரடி விபச்சார வேட்டையில், பவித்ரா மீட்கப்பட்டார். அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்போதுதான் கன்னட பிரசாத், கங்காதரன், விமலா ஆகியோ>ன் மேட்டர்கள் தெரிய வந்தன. சிலநாட்களில் விமலாவும், கங்காதரனும் கைது செய்யப்பட்டனர். ஆனால் வழக்கம் போல பிரசாத் மட்டும் தப்பித்து விட்டார்.

இந்தப் பின்னணியில் பிரசாத்தை மேலும் 3 வழக்குகளில் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை எழும்பூர் 6வது பெருநகர குற்றவியல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

அடுத்து பிரசாத் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குசும் ஜாமீன் மனு தள்ளுபடி:

இதற்கிடையில் பிரசாத்தின் 3வது மனைவி குசும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

மும்பையைச் சேர்ந்த சுஜிதா வீட்டு வேலைக்கு சென்னைக்கு வந்தார். அப்போது தன்னையும் வேறு சில பெண்களையும் கன்னட பிரசாத் மற்றும்குசும் ஆகியோர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக போலீஸில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில் குசுமையும், கன்னட பிரசாத்தையும் போலீஸார் கைது செய்துள்ளனர். முதலில் கன்னட பிரசாத் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலங்கள் தமிழக திரையுலகை பெரும் கலக்கு கலக்கி வருகின்றன.

இந்த நிலையில் அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரசாத்தின் 3வது மனைவி குசும், கடந்த 22ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குசும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பெரிய கருப்பையாமுன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. குசுமுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசுத் தரப்பு கோரியது.

இதை ஏற்ற நீதிபதி குசுமுக்கு ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil