»   »  மாமா வலையில் அரசியல்வாதிகள்!

மாமா வலையில் அரசியல்வாதிகள்!

Subscribe to Oneindia Tamil

மாபெரும் மாமா கன்னட பிரசாத்தின் வலையில் பல அரசியல் திமிங்கலங்களும் கும்மாளமிட்டு குதூகலித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

16 வருஷமாக தென் மாநிலங்களில் விபச்சாரத் தொழிலில் களியாட்டம் நடத்தி வந்த கன்னட பிரசாத், இப்போது புழல் சிறையில் களி சாப்பிடும்நிலைக்கு வந்துள்ளார்.

சுதந்திரப் பறவையாக இருந்து வந்த பிரசாத் சிறைப் பறவையாக மாறியுள்ள நிலையில் அவருடன் தொடர்புடைய திரையுலக புள்ளிகள் குறித்ததகவல்கள் அலை கடலென வந்த நிலையில் இப்போது பிரசாத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் சிலர் குறித்த திடுக்கிடும் தகவல்களும்வெளியாகியுள்ளன.

பிரசாத் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் இந்த அரசியல்வாதிகள் குறித்தும் பல தகவல்களை கக்கியுள்ளாராம். இவற்றை போலீஸாரே கொஞ்சம்கொஞ்சமாக லீக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இப்போதைக்கு இரு பெரும் அரசியல் புள்ளிகள் குறித்த தகவல்களை காவல்துறை கசிய விட்டுள்ளது. இருவரில் ஒருவர் பழம்பெரும்அரசியல்வாதி. வாத்தியார் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர். தலைவியின் வலது கரமாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர்.இப்போது காவிக் கட்சியில் காலம் தள்ளி வருகிறார்.

இந்தத் தலைவர் இப்போது எம்.பியாக இருக்கிறார், இதற்கு முன்பு மத்திய அமைச்சராகவும் கொஞ்ச காலம் இருந்தவர். தலைவர், சென்னைக்குவெளியே உள்ள புறநகர்ப் பகுதியான படப்பையில் உள்ள ஒரு கிளப்பில் ஆயுள் கால உறுப்பினராக இருக்கிறார்.

இந்த கிளப்பின் மக்கள் தொடர்பு தொடர்பாளராக இருப்பவர்தான் தனக்கு பல நடிகைகளை தாரை வார்த்துக் கொடுத்து தொழிலுக்குப்பேருதவியாக இருந்தார் என்று ஏற்கனவே பிரசாத் தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம் (ஏற்பாடு செய்வதில் இவர் பெரிய மண்டைக்காரர்என்று கோலிவுட்டில் கூறுகிறார்கள்!)

பிரசாத்தின் ரெகுலர் கஸ்டமர்களில் இவரும் ஒருவராம். கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட நடிகைகளை (எல்லோரும் முன்னணி நடிகைகள்தான்!)படப்பை கேம்ப்புக்கு அனுப்பி வைத்துள்ளாராம் பிரசாத். இதற்காக பெரும் பணமும் பிரசாத் பாக்கெட்டுக்கு வந்து சேர்ந்ததாம்.

இதுபோக, தலைவர் பதவியில் இருந்தபோது, அதைப் பயன்படுத்தி பிரசாத்துக்கு பல காரியங்களையும் செய்து கொடுத்துள்ளாராம்.

படப்பை முகாம் சரிவராவிட்டால் சில சமயம் அந்தமானுக்கும் தலைவரை அனுப்பி வைத்து அல்லோகல்லப்படுத்துவாராம் பிரசாத். மாமாவுக்குஅந்தமானில் ஒரு மகா காட்டேஜ் இருக்கிறதாம். நிரந்தர காட்டேஜான அதில் மஜா செய்தவர்கள் பட்டியலைச் சொல்வதாக இருந்தால் ஒருமாமாங்கம் ஆகிப் போகும்.

அந்தமான் காட்டேஜ் கதையையே தனித் தொடராக வெளியிடலாம். அந்த அளவுக்கு மாமாவின் அந்தமான் லீலாவினோதங்கள் படுநீளமானவை, நீலமானவையும் கூட!

உள்ளூரில் உல்லாசமாக இருக்க தயங்குபவர்களை அந்தமானுக்கு அனுப்பி வைத்து அசத்துவாராம் பிரசாத். இங்கு போய் வந்த பல நடிகைகள் படுபிரபலமாக இருந்தவர்களாம். நம்ம தலைவரும் கூட பலமுறை அந்தமானுக்குப் போய் வந்துள்ளாராம். கேட்க கேட்க தலை திரு திருன்னுசுத்துதா!

அடுத்த அரசியல்வாதி ஜாதிக் கட்சி ஒன்றின் தலைவர். இவர், வாத்தியார் காலத்தில் எம்.பியாக இருந்தவர்தான். தலைவர் பெயரில் பல கல்விநிறுவனங்களை வைத்துள்ளார்.

இவரது பெயரில் ஏசி இருந்தாலும், உண்மையில் பார்ட்டி படு சூடானவராம். அடிக்கடி பிரசாத்தான் ஆட்களை அனுப்பி கூல் பண்ணுவாராம்.

கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தபோதிலும், திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்வதும் இந்த தலைவருக்கு முக்கிய உப தொழில். சிலபடங்களை இவர் தயாரித்தும் உள்ளார்.

இவருடன் குளிர்காய்ந்த நடிகைகள் பட்டியலும் பெரிது. பிஷ், குஷ், தாஜ், ரோஸ், தேவலோக தேவதை என பெரிய பெரியபார்ட்டிகளைத்தான் இந்தத் தலைவர் நுகர்ந்துள்ளார்.

இந்த இரு தலைவர்களும் இப்போது ஆளுங்கட்சிக்கு வேண்டப்படாதவர்கள் பட்டியலில் இல்லை. அதேசமயம், நெருங்கிய நட்பும்கொண்டிருக்கவில்லை. இதனால் இவர்களைப் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தாமல் பதுக்கி வைத்துள்ளது காவல்துறை.

இதை விட பெரிய தலைகள் சிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ள காவல்துறை, அந்த சமயத்தில் இவர்களையும் அந்தப் பட்டியலில் கோர்த்து விடகாத்துள்ளதாம்.

இதற்கிடையே, பிரசாத்திடம் விசாரணை நடத்த ஆந்திராவிலிருந்து ஒரு போலீஸ் டீம் சென்னைக்கு வந்துள்ளது. அம்மாநில ரகசியப் பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டா ரெட்டி தலைமையிலான அந்தப் படையினர், பிரசாத்திடம் தீவிர விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஆந்திர மாநில நக்சலைட்டுகளுடன் பிரசாத்துக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அதுகுறித்து விசாரிக்க வந்துள்ளனராம்.அப்படியே ஆந்திர மாநில நடிகைகளுக்கும், பிரசாத்துக்கும் பிரியமான தொடர்புகள் ஏதும் இருக்கிறதா என்பதையும் மோப்பம்பிடிக்கவுள்ளனராம்.

எல்லாம் சரி, எல்லோருக்கும் பாசமான மாமாவாக இருந்த பிரசாத் எப்படி இப்படி திடீரென மோசமானவராக மாறிப் போனார் என்பதுதான்சிதம்பர ரகசியமாக இருக்கிறது!

ஜாமீன் கிடைக்குமா?

இதற்கிடையில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கன்னட பிரசாத் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்கபோலீஸ் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படுகிறது.

விபச்சாரப் புரோக்கர் கன்னட பிரசாத் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த மனு இன்று காலை நீதிபதிபெரியகருப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீஸ் தரப்பில் ஜாமீன் வழங்கக் கூடாது என்று கோரிக்கை விடப்பட்டது. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கன்னட பிரசாத்மீதான 18 வழக்குகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அவர் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.

எனவே அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவேஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று மாலை தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கிடையே, பிரசாத்தை காவலில் விட அனுமதிக்குமாறு கோரி போலீஸ் தர ப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனு மீதும் இன்று மாலை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil