For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒரு மாமாவின் டைரிக் குறிப்பு ...

  By Staff
  |

  காம சாம்ராஜ்யத்தின் மாமன்னராக திகழ்ந்து வந்த கன்னட பிரசாத்தின் டைரியிலிருந்து சில முக்கிய மேட்டர்களை லீக் செய்துள்ளது சென்னை போலீஸ்.

  கடந்த 20 ஆண்டுகளாக சென்னை மாநகரை மையமாகக் கொண்டு விபச்சார சூறாவளியாக சுழன்று வந்த பிரசாத் இப்போது புழல் சிறையில் ஓய்வெடுத்து வருகிறார்.

  பிரசாத் குறித்து பக்கம் பக்கமாக தகவல்கள் கொடுத்து வந்தது சென்னை போலீஸ். பிரசாத்துடன் தொடர்பு வைத்திருந்த முன்னணி நடிகைகள், அவரது காஸ்ட்லி கஸ்டமர்களின் பட்டியலை சென்னை போலீஸ்தான் வெளியிட்டது.

  இப்போது கன்னட பிரசாத்தின் காம டைரியிலிருந்து மேலும் சில பக்கங்களைத் திறந்து காட்டியுள்ளது காவல்துறை. ஆனால் இந்த முறை சென்னை காவல்துறை அன்பர்கள் வெளியிட்டுள்ள தகவல் படு பரபரப்பானது.

  சமீபத்தில் சென்னை புறநகரான நீலாங்கரையில் உள்ள பிரசாத்தின் முக்கிய பங்களாவில் போலீஸார் நடத்திய சோதனையின்போது ஒரு டைரி கிடைத்தது. அதில் தனது வாடிக்கையாளர்களான நடிகைகள், வந்து போனவர்கள் என பலர் குறித்தத் தகவல்கள் இருந்தன.

  மொத்தம் 2 டைரிகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இரண்டையும், தெலுங்கில் எழுதியுள்ளார் பிரசாத். அவற்றில் எழுதியுள்ளவற்றை மொழி பெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் படித்துப் பார்த்த போலீஸார் ஆடிப் போய் விட்டனராம்.

  மாமா பிரசாத்தின் டைரிக் குறிப்பிலிருந்து சில ஹாட்டான பகுதிகளை உங்களுக்குத் தருகிறோம் ..

  அவர் ஒரு நடிகை. சாதாரண நடிகை அல்ல, சூப்பர் நடிகையாக முன்னணியில் இருக்கும் அழகு புயல். இவரது நடித்த முதல் தமிழ்ப் படத்தில், இவர் 2வது நாயகி. அடுத்த படம் இந்த நடிகையின் காட்டில் பெரு மழையை வரவழைத்து, இப்போது சூப்பர் இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்த மும்பை புயல்.

  பலரின் ஹார்ட்கோர் ஆசைகளை அடிக்கடி நிறைவேற்றி அமைதிப்படுத்தியவர் இந்த நடிகை. இந்த நடிகை என்னிடம் அறிமுகமான கதையே சுவாரஸ்யமானது. முதல் படத்தில் அறிமுகமான பின்னர் நடிகையைப் போய் பார்த்தேன். அதுதான் முதல் சந்திப்பு.

  இதில் காமெடி என்னவென்றால், அந்தப் படத்தில் மெயின் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை, எனது வாடிக்கையாளர் பட்டியலில் முன்னணியில் அப்போது இருந்தார்.

  நான் எதற்காக நடிகையை சந்தித்தேன் என்றால், பெங்களூரைச் சேர்ந்த முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர், நடிகை மீது மோகம் கொண்டு எப்படியாவது வேண்டும் என்று அடம் பிடித்தார்.

  அவருக்காகவே நான் நடிகையைப் போய்ப் பார்த்தேன். கம்பெனி கேட்கிறார், தர முடியுமா என்று நடிகையிடம் பேசினேன். நல்ல ஆஃபர் என்பதால் நடிகையால் மறுக்க முடியவில்லை. சரி என்றார்.

  அப்புறம் எனது உதவியாளர் காளிமுத்துவை நடிகையிடம் அனுப்பி டெர்ம்ஸ் பேசினோம். கூலி ஜாஸ்தியாகவே கேட்டார் நடிகை. ஆனால், பார்ட்டியோ, இதென்னப்பா, இதை விட கூடுதலாகவே தருகிறேன் என்று சொல்லவே சந்தோஷமாகி விட்டார் நடிகை.

  சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நடிகையிடம் ஜாலியாக இருந்த ஒரு நாள் இரவுக்கு மட்டும் அந்த பெங்களூர் பார்ட்டி ரூ. 25 லட்சத்தை தூக்கிக் கொடுத்து விட்டுப் போனார். யார் கொடுப்பார்கள் இப்படி.

  தனது வாழ்க்கையில் நடிகை சம்பாதித்த பெரும் தொகையாம் இது. கொடுத்த காசுக்கு வஞ்சம் இல்லாமல், நடிகை, பெங்களூர்க்காரரை சந்தோஷப்படுத்தினார்.

  இந்த சந்திப்புக்குப் பின்னர் நடிகை எனது பட்டியலில் இடம் பெற்றார். எனது டீலிங் அவருக்குப் பிடித்துப் போய் விட்டது. அடுத்த முறை, அந்த நடிகையைப் பார்த்தது ஏவி.எம். ஸ்டுடியோவில். அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.

  படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகை, என்னைப் பார்த்ததும் ஓடோடி வந்தார். நல்ல அசைன்மென்ட் இருந்தா கொடுங்க, செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார்.

  அதைக் கேட்டு நான் பூரிப்படைந்தேன். மடத்துக்கு நெருக்கமான ஒரு பிரமுகருக்கு சந்தோஷம் கொடுக்க வேண்டும் என்றேன். செய்துட்டாப் போச்சு என்று சந்தோஷமாக ஒத்துக் கொண்டார் நடிகை.

  ஆனால் இந்த முறை ஹோட்டல் வேண்டாம், ஏதாவது வித்தியாசமான இடமாக பாருங்களேன் என்று செல்லமாக கேட்டுக் கொண்டார். அவரது விருப்பத்தை விட்டு விட முடியுமா. ஆந்திர எல்லையில் உள்ள ஒரு பண்ணை வீட்டை பரிந்துரைத்தேன்.

  அது சாதாரண பண்ணை இல்லம் அல்ல. மடத்தின் சாமி அங்குதான் அடிக்கடி போய் இளைப்பாறி வருவார். ஓ.கே. நோ பிராப்ளம் என்று கூறிய நடிகை, சாப்ட்வேர் சாமியிடம் பெற்ற அதே தொகையைக் கொடுத்து விட வேண்டும், நான் சரியான நேரத்துக்கு வந்து விடுவேன் என்றார்.

  நடிகையின் தொழில் பக்தியைப் பார்த்து வியந்து போனேன். இப்படி அவர் எதிலும் ஈடுபாட்டோடும், பக்தியோடும் இருப்பதால்தான் இந்த அளவுக்கு முன்னணிக்கு வர முடிந்தது என்று அந்த நடிகையைப் பற்றி புளகாங்கிதமடைந்துள்ளார் பிரசாத்.

  அடுத்து ஒரு நடிகையைப் பற்றி புட்டுப் புட்டு வைத்துள்ளார் பிரசாத். அதைப் பற்றி அப்புறம் பார்ப்போம்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X