»   »  பிரஷாந்த்துடன் இணையும் கிரகலட்சுமி!

பிரஷாந்த்துடன் இணையும் கிரகலட்சுமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் பிரஷாந்த்துடன் இணைந்து வாழ விருப்பம் சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் அவரது மனைவி கிரகலட்சுமி தெரிவித்துள்ளார்.

தனது மனைவி தன்னை விட்டு அவரது தாயார் வீட்டில் வசித்து வருவதாகவும்,தன்னுடன் இணைந்து வாழ உத்தரவிட வேண்டும். எனது குழந்தையைப் பார்க்கஅனுமதிக்க வேண்டும் என்றும் கோரி பிரசாந்த் மனு செய்திருந்தார். அத்தோடுகிரகலட்சுமி மீது பல்வேறு புகார்களையும் அவர் அடுக்கியிருந்தார்.

கிரகலட்சுமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனக்கு பிரஷாந்த் மாதம் ரூ. 1லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தார். இதையடுத்துஇருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.அதன்படி இருவரும் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதிதேவதாஸ், இருவருக்கும் சமரச மையத்தில் வைத்து ஆலோசனை வழங்கஉத்தரவிட்டார்.

அதன்படி இருவருக்கும் கடந்த 8ம் தேதி ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த சமரசமுயற்சிகள் சுமார் 2 மணி நேரம் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை கிரகலட்சுமிதனது கைக்குழந்தையுடன் நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்றத்தில் அவர் ஒருமனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், எனது கணவர் பிரஷாந்த் அவருடன் என்னை சேர்த்து வைக்கக் கோரி வழக்குதொடர்ந்துள்ளார். குழந்தையின் நலன் கருதி அவருடன் சேர்ந்து வாழ விருப்பம்தெரிவிக்கிறேன்.

பிரஷாந்த் தாக்கல் செய்த மனுவுக்கு நான் பதில் அளித்து தாக்கல் செய்த மனுவில்தெரிவித்த கருத்துக்களுக்காக மனதளவில் வருத்தப்படுகிறேன். நான் எனதுகணவருடன் சேர்ந்து வாழ்ந்தால் தான் குழந்தையின் எதிர்காலம் நலமாக இருக்கும்.

எனது குழந்தையுடன் கணவர் வீட்டில் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அதற்குமனப்பூர்வமாக தயாராக இருக்கிறேன். இவ்வளவு கால தாமதம் ஏற்பட்டதால் ஈடுகட்ட முடியாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பொங்கலை எனது கணவருடன் சேர்ந்து கொண்டாட விரும்புகிறேன். எனவேஎங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இம்மனு நீதிபதி தேவதாஸ் முன்பு நாளை விசாரைணக்கு வருகிறது. அப்போதுபிரஷாந்த்தும், கிரகலட்சுமியும் மீண்டும் இணைந்து வாழும் சந்தோஷ உத்தரவைநீதிபதி பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil