கிரகலட்சுமி கதை படமாகிறது!

By Staff

மனைவிக்கு நடந்த திருமணம் என்ற பெயரில் சர்ச்சை இயக்குநர் வேலு பிரபாகரன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இது சமீப காலமாக தமிழக மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரஷாந்த்-கிரகலட்சுமி கதை என்று கூறப்படுகிறது.

பரபரப்பான படங்களை இயக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்துபவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய காதல் அரங்கம் படத்தில் செக்ஸ் காட்சிகள் அதீதமாக இருப்பதாக கூறி சென்சார் போர்டு சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டது.

இதனால் காதல் அரங்கம் வருமா, வராதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் புதிதாக ஒரு பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் வேலு பிரபாகரன். மனைவிக்கு நடந்த திருமணம் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

சமீப காலமாக பத்திரிக்கைகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும் பிரஷாந்த் -கிரகலட்சுமி விவகாரத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதையை அமைத்துள்ளார் வேலு பிரபாகரன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது ஒரு மனைவிக்கு நடந்த திருமணம் குறித்த கதை. பெண்களை அடிமையாகவே வைத்திருக்க ஆண் கண்டுபிடித்த வழிதான், பெண் புனிதமானவள் என்ற சொல்.

பெண் புனிதமானவள் என்ற பெயரில் அடிமைச் சங்கிலியால் பெண்ணைப் பிணைத்து வைத்துள்ளனர். ஆனால் பெண் புனிதமானவள் அல்ல, அவளும் ஆண்களைப் போலவே சம உரிமைகளை, உணர்வுகளைக் கொண்டவள்தான்.

இதை வலியுறுத்தும் வகையில் இந்தப் படத்தின் கதை இருக்கும் என்கிறார் வேலு பிரபாகரன்.

பிரஷாந்த், கிரகலட்சுமி கதை என்று வேலு பிரபாகரன் நேரடியாக கூறாவிட்டாலும் கூட அந்தக் கதைதான் இந்தப் படத்தின் கதை என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X