»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் சம காலத்து ஹீரோக்கள் நட்புடன் இருப்பது அரிதான விஷயம்.

அதை உடைக்கும் விதமாக இந்தக் காலத்து இளம் தலைமுறை ஹீரோக்கள் ஒருவருக்கொருவர் நட்புடன் இருந்து வருகின்றனர். இது சமீபத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டது.

நடிகர் பிரசாந்த் சண்டைக்காட்சியின்போது காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காலில் ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் கடந்த 2வாரங்களாக தனியார் மருத்துவமனையில் அவர் இருந்தார்.

சிகிச்சை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27, 2002) அவர் வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய பிரசாந்த்தை நடிகர்கள் விஜய், சூர்யா, அருண்குமார் ஆகியோர் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.

அக்கறையுடன் அவர்கள் தனது நலன் குறித்து விசாரித்தபோது பிரசாந்த் நெகிழ்ந்து விட்டாராம். அஜீத், விக்ரம் மட்டும்தான் இதில் மிஸ்ஸிங்.

இதேபோல, சீனியர் நடிகர்களான விஜயகாந்த், சத்யராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, பாக்யராஜ், வினுச்சக்கரவர்த்தி, வெண்ணிற ஆடைமூர்த்தி, நடிகைகள் மஞ்சுளா, நிரோஷா, சிம்ரன், குஷ்பு ஆகியோரும் பிரசாந்தைச் சென்று பார்த்து அவருடைய உடல்நலத்தை விசாரித்தனர்.

எப்படியோ தமிழ் சினிமா உலகம் ஒற்றுமையுடன் இருந்தால் சரி.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil