»   »  விருது பெற்றார் சேரன்

விருது பெற்றார் சேரன்

Subscribe to Oneindia Tamil


சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நேற்று டெல்லியில் வழங்கினார்.


2005ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

சிறந்த நடிகருக்கான விருதை அமிதாப் பச்சனும், நடிகைக்கான விருதை சரிகாவும் பெற்றனர். தமிழில் சிறந்த குடும்பப் படத்திற்கான விருது தவமாய் தவமிருந்து படத்துக்குக் கிடைத்தது. இதற்கான விருதை இயக்குநர் சேரன் பெற்றுக் கொண்டார்.

தமிழில் சிறந்த படத்துக்கான விருது ஆடும் கூத்து படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.வி.சந்திரனுக்குக் கிடைத்தது. இதேபோல வசந்த் இயக்கிய தக்கையின் மீது நான்கு கண்கள் குறும்படத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.

தவமாய் தவமிருந்து படத்துக்குக் கிடைத்துள்ள விருதுக்குக் காரணம் தமிழக மக்கள்தான், அவர்களுக்கு எங்களது நன்றிகள் என்று இயக்குநர் சேரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Read more about: cheran
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil