»   »  தாய் என்னை விபச்சாரத்தில் இறக்கினார்-ப்ரீத்தி

தாய் என்னை விபச்சாரத்தில் இறக்கினார்-ப்ரீத்தி

Subscribe to Oneindia Tamil

பெற்றோர் தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதால் தான் வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டதாக நடிகை ப்ரீத்தி வர்மா போலீசாருக்கு கடிதம்அனுப்பியுள்ளார்.

மாறன் என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ப்ரீத்தி வர்மா. அதன் பின்னர் நீ மட்டும், துள்ளல், மூன்றாம் பவுர்னமி,திருமகன், அன்புத் தோழி, 18 வயசுப் புயலே உள்ளிட்ட பல படங்களில் கிளாமர் வேடத்திலும், குத்துப் பாட்டுக்கும் ஆடியுள்ளார்.

சமீபத்தில் ராமுடு மஞ்சு பாலுடு என்ற தெலுங்குப் படப்பிடிப்புக்காக ராஜமுந்திரி சென்றிருந்த ப்ரீத்தி, விந்தியாவின் முன்னாள் காதலரும்மேனேஜருமான அருணுடன் ஓடிப் போய்விட்டார்.

இதையடுத்து ப்ரீத்தியின் தாயார் ரம்யா, தந்தை பரத்தும் ஆகியோர் சென்னை கே.கே.நகர் போலீஸில் தங்களது மகளை அருண் கடத்திச்சென்றுவிட்டதாக புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இந் நிலையில் கே.கே.நகர் போலீஸாருக்கு ப்ரீத்தியிடம் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.

என் பெயர் ப்ரீத்தி வர்மா. வயது 21. இந்தக் கடிதத்ததை நான் எந்த நெருக்குதலும் இல்லாமல் தெளிவான மன நிலையோடு தான் எழுதுகிறேன்.என் தந்தை பெயர் பரத்குமார், தாயார் ரம்யா. என் தம்பிகள் ரஞ்சித், பப்பு.

நான் கடந்த 3 வருடமாகவே சந்தோஷமாக இல்லை. எனக்கு மூன்றாண்டுகளுக்கு முன் விஜய் என்பவருடன் காதல் ஏற்பட்டது. ஆனால், காதலைஎன் பெற்றோர் ஏற்கவில்லை. அதன் பின்னர் அருண் (விந்தியாவின் மாஜி காதலர் கம் மேனேஜர்), மகிந்தர் ஆகியோருடன் எனக்கு நட்புஏற்பட்டது. ஆனால், அந்த நண்பர்களையும் எனது பெற்றோர் சந்தேகக் கண்களுடன் தான் பார்த்தனர்.

4 வருடத்துக்கு முன் மாறன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானேன். அதன் பின்னர் நான் நடித்து கிடைத்த பணத்தையெல்லாம்பெற்றோரிடம் தான் தந்தேன். ஆனால், அந்தப் பணம் அவர்களுக்கு போதவில்லை. மேலும் பணம் சம்பாதிக்குமாறு நெருக்கினர். அதற்காகஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளவும், உடல் உறவு வைத்துக் கொள்ளவும் என் தாயார் ரம்யா என்னை கட்டாயப்படுத்தினார்.

ஆனால், பணம் சம்பாதிப்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. நான் உறவு வைத்துக் கொள்ள மறுத்தால் அடித்து உதைத்தனர்.

இதனால் யோசித்து முடிவெடுத்துத் தான் வீட்டை விட்டு வெளியேறினேன். நான் நடிகை என்றாலும் எனக்கும் ஆசைகள் உண்டு, பெண் என்றவகையில் கனவுகள் உண்டு. ஆனால், என் அம்மா செய்த தவறால் எல்லாம் கெட்டுப் போனது. எனக்கு போன் செய்து விபச்சாரத்துக்கு வர்றியாஎன்று கேட்கும் அளவுக்கு என் பெய அம்மா கெடுத்துவிட்டார்.

இதனால் சந்தோஷமான வாழ்க்கை தேடி செல்கிறேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் பெற்றோர் தான் பொறுப்பு. என் கஷ்டங்களை நான் தம்பிரஞ்சித்திடம் சொன்னேன். ஆனால் அவனும் உதவவில்லை, காரணம் பணம் தான்.

என் மகிழ்ச்சிக்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளேன். என்னை யாரும் கடத்தவில்லை. நானாக விருப்பப்பட்டே மும்பைக்கு வந்துவிட்டேன்.

என் வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்ளும் முழு உரிமை எனக்குண்டு. எனவே யாரும் என்னை தேட வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன்.

எனக்கு விருப்பம் இல்லாத விபச்சாரத் தொழிலில் ஈடுபடும்படி எனது தாய் வற்புறுத்தினார். இப்போது அவரது பிடியிலிருந்து நான் விடுபட்டுவிட்டேன்.

இவ்வாறு கடிதம் எழுதி கையெழுத்தும், கூடவே கை நாட்டும் வைத்துள்ளார் ப்ரீத்தி. மேலும் தனது பாஸ்போர்ட்டின் ஜெராக்ஸ் காப்பியையும்இணைத்துள்ளார் ப்ரீத்தி வர்மா.

அருண் வந்தார்.. ப்ரீத்தி எங்கே?:

இதற்கிடையே அருண் சென்னைக்கு வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது புதுக் கதையை சொல்லியிருக்கிறார்.

அருண் கூறியதாவது:

கடந்த 9ம் தேதி நான் திருவனந்தபுரத்தில் இருந்தபோது ப்ரீத்தி வர்மா எனது செல்போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் கால் மீ என்றுஇருந்தது. இதையடுத்து அவரது செல்போனை தொடர்பு கொண்டேன். அப்போது, தெலுங்கு படப்பிடிப்புக்காக ராஜமுந்திரியில் இருப்பதாகவும்,உடனே வருமாறும் சொன்னார்.

இதையடுத்து 10ம் தேதி ராஜமுந்திரி சென்று லாட்ஜில் தங்கினேன். அப்போது என்னை சந்தித்த ப்ரீத்தி வர்மா என்னை மும்பைக்கு அழைத்துச்சென்றார். லேப்டாப் கம்ப்யூட்டருடன் அவர் வந்தார். மும்பை விமான நிலையத்தில் போய் இறங்கியதும், நான் டாய்லெட் போய்விட்டுவருகிறேன் என்று சொல்லிவிட்டு லேட் டாப்புடன் சென்றார்.

ஆனால், போனவர் வரவே இல்லை. நான் நெடு நேரம் காத்திருந்தேன். நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதையடுத்து விமான நிலையஅதிகாரிகளிடம் சொன்னேன். அவர்களோ, உள்ளே யாரும் இல்லை. அவர் சென்னைக்கு போயிருக்க வேண்டும் என்றனர். ப்ரீத்தியின்செல்போனை தொடர்பு கொள்ள முயன்றேன். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து நடந்த விஷயத்தை ப்ரீத்தியின் பெற்றோருக்கு போன் செய்து கூறினேன். அவர்கள் சென்னைக்கு வருமாறு கூறினர். இதையடுத்துசென்னைக்கு வந்துவிட்டேன். எனக்கும் ப்ரீத்திக்கும் காதலும் இல்லை, கல்யாணமும் நடக்கவில்லை. அது வெறும் 2 மாத நட்பு தான் என்றார்.

விஜய்யுடன் ஓடினாரா?:

இதனால் ப்ரீத்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள காதலன் விஜய்யுடன் தான் ஓடியிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். மும்பைசெல்வதற்கு சும்மா துணைக்கு அருணை அழைத்துக் கொண்டு சென்றிருக்கலாம் என்றும் போலீசார் நம்புகின்றனர். இதையடுத்து விஜய்யை தேடிப்பிடிக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

அல்லது அருண், ப்ரீத்தி ஆகியோர் சேர்ந்து ஏதாவது டிராமா போடுகிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

விந்தியா-ப்ரீத்தி: குற்றசாட்டு ஒன்றே:

நீண்ட காலம் ஒன்றாய் வசித்த பின் சமீபத்தில் தான் அருணை விந்தியா கழற்றிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விந்தியா வீட்டு விட்டுவெளியேறி அருணுடன் குடித்தனம் நடத்திபோது இப்போது ப்ரீத்தி சொன்ன அதே குற்றச்சாட்டுகளை தான் தனது பெற்றோர் மீதும் வீசினார்.

தனது பெற்றோர் தன்னை மீது விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் என்று புகார் சொல்லித் தான் அருணுடன் தனி வீட்டில்குடியேறினார் விந்தியா.

தற்கொலைக்கு முயன்ற ப்ரீத்தி குடும்பம்:

இதற்கிடையே, ப்ரீத்தியின் தாயார் ரம்யா கூறுகையில்,

ப்ரீத்தி படப்பிடிப்புக்குப் போகும்போது நானோ அல்லது எனது கணவரோ உடன் செல்வோம். ராஜமுந்திரிக்கு நான்தான் உடன் சென்றிருந்தேன்.நான் ஹோட்டலில் இருந்தபோது எனது மகனுக்கு உடல் நலம் சரியில்லை. எனவே என்னை ஹோட்டலிலேயே விட்டு விட்டு ப்ரீத்தி மட்டும்ஷூட்டிங்குக்கு கிளம்பிப் போனாள். அதன் பிறகு திரும்பி வரவே இல்லை.

இப்போது இந்த விவகாரத்தில் என்னையும், எனது கணவரையும் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இத்தனை அவமானங்களைசந்தித்ததால் மனம் உடைந்த நானும் எனது கணவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்தோம். ஆனால் உறவினர்கள்தான் தலையிட்டு காப்பாற்றிவிட்டனர்.

என் மகள் என்ன ஆனாளோ என்று புலம்பினார்.

யார் இந்த அருண்?:

கேரளத்தைச் சேர்ந்த அருண், விந்தியாவுக்கு காதலராகவும் மேனேஜராகவும் இருந்தவர்.

அருணின் முக்கிய வேலை நடிகைகளை கூட்டிக் கொண்டு அரபு நாடுகளுக்குப் போய் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதுதான். இதனால் நடிகைகள்,துணை நடிகைகளுடன் அதிகம் புழங்குவார். இரு மாதங்களுக்கு முன் ப்ரீத்தியை கலை நிகழ்ச்சிக்காக அழைத்துச் சென்று தன் கஸ்டடியில் கொஞ்சகாலம் வைத்திருந்தார் அருண்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil