»   »  ப்ரீத்தி பெயரில் போலி கடிதம்!

ப்ரீத்தி பெயரில் போலி கடிதம்!

Subscribe to Oneindia Tamil

எங்களது மகள் ப்ரீத்தி வர்மாவைத் தேடிப்பிடித்து ஒப்படைக்க போலீஸார் முயற்சிகள் செய்யாவிட்டால்நாங்கள் குடும்பத்தோடு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்வோம் என்று அவரது தந்தை பரத்மிரட்டியுள்ளார்.

மேலும் தன்னை தாயார் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ப்ரீத்தியின் பெயரில் வந்துள்ள கடிதம் போலியானதுஎன்றும் அவர் கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடந்த தெலுங்குப் பட ஷூட்டிங்குக்குப் போன ப்ஙுரீதி வர்மா திடீரெனகாணாமல் போய் விட்டார்.

நடிகை விந்தியாவின் மன்னாள் மேலாளரும், காதலருமான அருண்தான் கடத்திக் கொண்டு போய் விட்டதாகப்ரீத்தியின் குடும்பம் குற்றம் சாட்டுகிறது. ஆனால், அவரை முன்னாள் காதலன் விஜய்தான் கடத்திச் சென்றுவிட்டதாக அருண் தரப்பு கூறப்படுகிறது.

இந் நிலையில் தன்னை தனது பெற்றோர் விபச்சாரத்தில் தள்ளி கொடுமைப்படுத்தியதாக ப்ரீத்தி வர்மாசென்னை போலீஸுக்கு அனுப்பிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இக்கடிதம் 12ம் தேதி சென்னை அண்ணா சாலை தபால் நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் 11ம்தேதி போலீசாரிசம் அருண் கொடுத்த வாக்குமூலப்படி ப்ரீத்தி மும்பையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவேஇந்தக் கடிதத்தை யார் அனுப்பியது என்பதில் குழப்பம் நிலவுகிறது.

இந்த நிலையில், ப்ரீத்தியின் பெற்றோர் பரத்குமார், ரம்யா ஆகியோர் சென்னை காவல்துறை ஆணையர்அலுவலகம் வந்து புதிய புகார் ஒன்றைக் கொடுத்தனர்.

அதில், அருண்தான் தங்களது மகளைக் கடத்திச் சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.

இந் நிலையில் போலீஸார் தங்களது மகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தராவிட்டால் குடும்பத்தோடு தூக்கில்தொங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று பரத்குமார் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், எங்களுக்கு ப்ரீத்தி எழுதியதாக கூறப்படும் கடிதம் மீது நம்பிக்கை இல்லை. அவளே வந்துஅதில் உள்ளது போல சொல்லட்டும், அப்புறம் நம்புகிறோம், விலகிக் கொள்கிறோம்.

ப்ரீத்தி காணாமல் போனது முதல் அவர் நடிப்பதாக புக் ஆகியிருந்த படங்களின் தயாரிப்பாளர்கள் தொல்லைகொடுக்க ஆரம்பித்துள்ளனர். மூன்றாம் பவுர்ணமி, காதலுக்குத் தலை வணங்கு ஆகிய தமிழ்ப் படங்கள் மற்றும்தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்தில் அவர் நடித்துக் கொடுக்க வேண்டும்.

நாங்கள் மானத்தோடு வாழ நினைக்கிறோம், ஆனால் எங்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. கமிஷனர்அலுவலகத்தில் புகார் கொடுக்கப் போனால் ராஜமுந்திரி போய் புகார் கொடுக்க வேண்டியதுதானே, இங்கே ஏன்வந்தீர்கள் என்கிறார்கள்.

எங்களது மகளைக் கண்டுபிடித்துத் தராவிட்டால் குடும்பத்தோடு தூக்கில் தொங்குவதைத் தவிர வேறுவழியில்லை.

அருணை முறைப்படி விசாரித்தால், உண்மை தானாக வரும் என்றார் பரத்.

வழக்கு ராஜமுந்தி>க்கு மாற்றம்:

இதற்கிடையே, ப்ரீத்தி வழக்கை ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி காவல் நிலையத்துக்கு மாற்ற சென்னைகாவல்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறுகையில், சம்பவம் ராஜமந்தி>யில்நடந்துள்ளதால் இந்த வழக்கை அங்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். ப்ரீத்தி வர்மா தொடர்பான அனைத்துப்புகார்களும் ராஜமுந்திரி காவல் நிலையத்துக்கு மாற்றப்படும்.

இங்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராஜமுந்திரி போலீஸார்தான் இதை விசாரிக்க வேண்டும்என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil