»   »  ப்ரீத்தி: தப்பும் மார்வாடி வாலிபர்

ப்ரீத்தி: தப்பும் மார்வாடி வாலிபர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எங்களது மகள் பிரீத்தி வர்மா படத்திற்கு தினமும் மாலை போட்டு கொண்டே தான் இருப்போம் என அவரது தாயார் ரம்யா கூறியுள்ளார்.

ப்ரீத்தி வர்மா தன் காதலனான செளகார்பேட்டையைச் சேர்ந்த மார்வாடி வாலிபர் மகேந்திருடன் ஓடிப் போய்விட்டதாக ரம்யா கூறுகிறார். ஆனால்,மகேந்தர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் புகார் கூறியுள்ளார்.

ரம்யா கூறுகையில்,

வீட்டில் எப்போது பார்த்தாலும் தொலைபேசியில் காதலுடன் பேசி கொண்டிருந்தாள் ப்ரீத்தி. அவனை காதலிக்கிறேன் என உறவினர்களிடம்கூறியிருக்கிறாள். ஆனால், இதுப்பற்றி எங்களிடம் ஏதும் கூறவில்லை. பெற்று வளர்த்ததற்கு நன்றி கடன் செய்து விட்டாள்.

அவளுக்கு நான் கொடுத்த தாய்பால் இப்படி விஷமாகி விட்டதை நினைக்கும்போது நெஞ்சு கனமாகி விடுகிறது. அவள் படத்திற்கு போட்டமாலையை கழற்ற மாட்டோம், தினமும் போட்டு கொண்டே தான் இருப்போம்.

மகேந்தர் எங்கள் குடும்பத்துடன் நன்றாக பழகுவான். அடிக்கடி போன் செய்து பேசுவான். ஆனால் ப்ரீத்தி காணாமல் போனதிலிருந்து எங்களிடம்பேசுவதை நிறுத்தி விட்டான். போலீஸில் அவன் மீது புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். ஏன் என்று தெரியவில்லை.

செளகார்பேட்டையில் உள்ள அவனது வீடு மற்றும் அலுவலகத்தை அடையாளம் காட்டியதோடு, அவனது போட்டோவையும் போலீசிடம்கொடுத்துள்ளோம் என்றார் ரம்யா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil