»   »  மார்வாடி-ப்ரீத்தி டும் டும்?

மார்வாடி-ப்ரீத்தி டும் டும்?

Subscribe to Oneindia Tamil

சென்னையைச் சேர்ந்த மார்வாடி வாலிபருக்கும், ப்ரீத்தி வர்மாவுக்கும் கல்யாணம் ஆகி விட்டதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.

கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் ப்ரீத்தி வர்மா, ஆந்திராவுக்கு ஷூட்டிங் சென்ற போது காணாமல் போய் விட்டார். நடிகை விந்தியாவின்முன்னாள் மேனேஜர் அருண்தான், ப்ரீத்தியை கடத்தி விட்டதாக முதலில் புகார் எழுந்தது.

ஆனால் போலீஸ் விசாரணையில் அருணுக்கு சம்பந்தம் இல்லை என்று தெரிய வந்தது. பின்னர் ப்ரீத்தியின் காதலர் விஜய் கடத்தியிருக்க வேண்டும்என கூறப்பட்டது. ஆனால் விஜய்க்கும் இதில் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது.

இந் நிலையில், மகேந்திரன் என்ற மார்வாடி வாலிபர்தான் ப்ரீத்தியைக் கடத்தியுள்ளார் என்று ப்ரீத்தியின் தாயும், தந்தையும் கூறினர்.மகேந்திரனைப் பிடித்தால் ப்ரீத்தியும் கிடைத்து விடுவார் என்று கூறினார்கள்.

மகேந்திரன் சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்தவர். ப்ரீத்தி குடும்பத்துடன் நெருங்கிப் பழகி வந்தாராம். ப்ரீத்தியின் பெற்றோரை அம்மா,அப்பாவை என்றுதான் பாசமாக கூப்பிடுவாராம். ப்ரீத்திக்கு ராக்கிக் கயிறு கூட கட்டினாராம்.

இந்த நிலையில் தங்களது நம்பிக்கையை சிதைத்து விட்டு ப்ரீத்தியை கடத்திச் சென்று விட்டார் மகேந்திரன் என்று போலீஸில் கொடுத்துள்ளபுகாரில், ப்ரீத்தியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, மகேந்திரன், ப்ரீத்தியை மணந்து கொண்டு விட்டதாக புதுத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த்த தகவலை ப்ரீத்தியின்பெற்றோரும் போலீஸில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ப்ரீத்தியை தேடும் பணியை போலீஸார் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil