»   »  ப்ரீத்திக்கு என்னப்பா ஆச்சு?

ப்ரீத்திக்கு என்னப்பா ஆச்சு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ப்ரீத்தி காணாமல் போய் 12 நாட்கள் ஆகி விட்டது. ஆனால் எங்கே போனார், என்ன ஆனார், ஏன் மாயமானார் என்பது குறித்து இதுவரையிலும்ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை.

வீரண்ணா, திருமகன், அன்புத்தோழி என சில படங்களிலும், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் பிசியாக நடித்து வந்தவர் ப்ரீத்தி. ராஜமுந்திரிக்குஷூட்டிங் போனவர் அப்படியே ஜூட் ஆகி விட்டார்.

பெத்து வளர்த்த முத்துப் பெண்ணைக் காணவில்லை என்று அறிந்த அப்பா பரத்குமாரும், அம்மா ரம்யாவும், கே.கே.நகர் போலீஸில் முறையிடவிசாரணைப் படலம் தொடங்கியது.

முதலில் அருண் என்பவர் சந்தேக வலையில் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது, ப்ரீத்தியுடன் நட்பாக பழகினேன். தனது பெற்றோரிடமிருந்துதன்னைக் காப்பாற்றுமாறு என்னிடம் கெஞ்சினார்.

இதையடுத்து அவருடன் மும்பை வரைக்கும் துணைக்குப் போனேன். விமான நிலையத்தில் என்னை விட்டு விட்டு ப்ரீத்தி காணாமல் போய் விட்டார்.இதுதொடர்பாக மும்பை விமான நிலைய போலீஸில் புகார் கொடுத்துள்ளேன். எனக்கென்னமோ, ப்ரீத்தியின் காதலர் விஜய் மீதுதான் சந்தேகமாகஇருக்கிறது என்று புதுத் தகவலைக் கொடுத்தார் அருண்.

இதையடுத்து விஜய்யைப் பிடித்தனர் போலீஸார். அவரோ போலீஸாரை உட்கார வைத்து இன்னொரு கதை சொன்னார். நான் ப்ரீத்தியைகாதலித்தது உண்மைதான். ஆனால் அவர் என்னைக் காதலிக்கவில்லை. இதையடுத்து அவரது வழியில் குறுக்கிடாமல் விலகி வந்து விட்டேன்.

எதுக்கும் செளகார்ப்பேட்டை நகை வியாபாரி மகேந்திரனை விசாரித்துப் பாருங்கள் என்று போலீஸைக் குழப்பியுள்ளார். இருந்தாலும் அப்படியேவிட முடியாதே! போலீஸார் மகேந்திரனையும் கூப்பிட்டு கேட்டுப் பார்த்தனர்.

ஆனால் அவரோ, அய்யா, எனக்கும் ப்ரீத்தி குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் உண்டு. என்னை அவங்களோட பிள்ளை போல பாவித்தனர், நான்போயா கடத்துவேன்? என்று தன் பங்குக்கு கலக்கியுள்ளார்.

மேலும் ப்ரீத்தியை நான் திருமணம் செய்ததாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இப்படி ஆளாளுக்கு ஒருத்தரை கை காட்டி விட்டுக் கொண்டிருப்பதால் கே. கே. நகர் போலீஸார் ஏறுக்குமாறாக குழம்பிப் போயுள்ளனர்.உண்மையில் ப்ரீத்தி என்ன ஆனார், இருக்கிறாரா இல்லையா? இருந்தால் எங்கே இருக்கிறார் என ஏகப்பட்ட கேள்விகள் வரிசை கட்டி வந்துபோலீஸாரை ரொம்பவே சோதித்துக் கொண்டுள்ளன.

ப்ரீத்தி சென்னைக்குள்தான் இருக்கிறார் என அவரது பெற்றோர் தொடர்ந்து கூறி வருகின்றனர். போலீஸோ படு நிசப்தமாக இருக்கிறது. இதனால்ப்ரீத்தி விவகாரம், கன்னித் தீவு கதை போல படு திரில்லிங்காக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil