»   »  மயங்கி விழுந்த ப்ரீத்தி வர்மா அம்மா!

மயங்கி விழுந்த ப்ரீத்தி வர்மா அம்மா!

Subscribe to Oneindia Tamil

மாயமாகி விட்ட நடிகை ப்ரீத்தி வர்மாவின் தாயார் மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கவர்ச்சி நாயகி ப்ரீத்தி வர்மா ஆந்திராவுக்கு ஷூட்டிங் போன இடத்தில் காணமல் போனார். அவரை நடிகை விந்தியாவின் மேனேஜர் அருண் கடத்தி விட்டதாகமுதலில் கூறப்பட்டது. ஆனால் காதலர் விஜய்தான் கடத்தியதாக பின்னர் கூறப்பட்டது. ஆனால் இருவருமே கடத்தவில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

திடீரென ப்ரீத்தியிடமிருந்து போலீஸாருக்கு வந்த ஒரு கடிதத்தில் தன்னை தனது பெற்றோர் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அதைப்ரீத்தியின் பெற்றோர் மறுத்தனர்.

இந்த நிலையில், மகேந்திரன் என்கிற மார்வாடி ப்ரீதி வர்மாவைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டதாக மிக லேட்டஸ்டாக கூறப்பட்டது. இதுவும் கூடஉறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிமிடம் வரை ப்ரீத்தி எங்கிருக்கிறார் என்பது பெரிய மர்மமாக உள்ளது.

இந்த நிலையில், ப்ரீத்தி வர்மாவின் தாயார் ரம்யாவுக்கு நேற்று திடீரென மயக்கம் ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை உடனடியாக சைதாப்பேட்டையில் உள்ளதனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

ப்ரீத்தி வர்மா எங்கிருக்கிறார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருவதால் அவரது தலைமறைவு ஒரு மர்ம தொடர் கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.ப்ரீத்தியை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil